திங்கள், 31 டிசம்பர், 2018

புத்தாண்டு வாழ்த்து கவிதை...!


பூத்தது புது வருடம்

பூத்து குழுங்கட்டும் புது வசந்தம்


நடந்து முடிந்தது முடிந்தது - இனி

நடப்பவை நல்லபடியாக நடக்கட்டும்.


எதிர்காலத்தை திட்டமிடுவோம்

எண்ணங்களை வசப்படுத்துவோம்


கடந்த வருடம்- நம்

கஷ்டங்களை கொண்டு போகட்டும்


புது வருடம் – பல

புதுமைகள் காண உதவட்டும்

நினைவுகளாய் இருக்கும் கனவுகள்

நிஜமாய் மாறட்டும்


இன்னொரு ஜென்மம் உண்டென்றால்

இந்த சொந்தங்கள் தொடரட்டும்


நம் வீட்டு சொந்தங்கள்

நலம் வாழ நாளும் பிராத்திப்போம்...!

 

அனைவரது வாழ்வும் நலமும்...வளமும்...
பெற்று 2019 ம் ஆண்டு மகிழ்ச்சியாக அமையட்டும்....ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்..!..நா.சு.கார்த்தி

புத்தாண்டு வாழ்த்து கவிதை...!


நாம் கடந்து வந்த
வாழ்க்கை புத்தகத்தில்,

வருடங்கள் மாதங்கள்
வாரங்கள் நாட்கள்
நிமிடங்கள் நொடிகளென
அனைத்து பக்கங்களை
புரட்டிப் பார்த்தால்,
நமக்கொன்று ஒன்று மட்டும் புரியும்
புத்தாண்டு என்பது
வருங்கால தேதிகளை மாற்றிவிடும்
ஒரு நாள்தான் என்று ;


கடந்து வந்த பாதைகள்
கடக்கவிருக்கும் பாதைகள்
நாம் சந்திக்க போகும்
அனுபவங்கள் யாருக்கும் தெரியாது

திசை திரும்பிவிட்ட
படகுமேலேரி பயணிக்கும் நம்மை
இந்த புத்தாண்டு
நம் கனவு கரையில் போய் சேர்க்கட்டும்;


மாற்றங்கள் அனைத்தும் பொதுவாயினும்
நம்மில் புதுப்புது மாற்றஙள் தோன்றி
நம் வாழ்வில் இன்பமும் அமைதியும்
என்றும் நிலைத்துவிட
இறைவனிடம் பிரார்த்தித்து
என் புத்தாண்டு வாழ்த்தினை சமர்ப்பிக்கிறேன்


அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே...


நன்றி. -நட்புடன் நா.சு.கார்த்தி

திங்கள், 17 டிசம்பர், 2018

வைகுண்ட ஏகாதசி 18/12/2018


ஓம் நமோ நாராயணா

வைகுண்ட ஏகாதசி

18/12/2018


வைகுண்ட ஏகாதசி விஷ்ணு ஆலயங்கள் அனைத்திலும் சொர்க்க வாசல் திறப்பு விழா நடத்தப்படும். 


இறைவனை தொழும் ஜீவாத்மா, வைகுண்ட வாசலில் வழியாக பரமாத்மாவை சேருகிறது என்ற ஐதீகத்தின் அடிப்படையில், இந்த சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெறு கிறது. 


இந்த விழா அதிகாலை வேளையிலேயே நடை பெறும். 

இதில் நாம் கலந்து கொண்டு, இறைவனுக்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளை கண்டுகளித்து பயன் அடையலாம்


விஷ்ணுவை வேண்டி வழிபடும் விரதங்களில் முதன்மையானதாக இருப்பது ‘ஏகாதசி விரதம்’. இந்த விரதத்தை கடைப்பிடிப்பது ‘அஸ்வமேத யாகம்’ செய்த பலனைக் கொடுக்கும் என்கிறது புராணங்கள்.

காயத்ரிக்கு ஈடான மந்திரம் இல்லை; தாய்க்கு சமமான தெய்வம் இல்லை; கங்கைக்கு ஈடான தீர்த்தம் இல்லை; ஏகாதசிக்கு சமமான விரதம் இல்லை’ 


என்று இந்த விரதத்தை மகிமைப் பற்றி அக்னி புராணம் எடுத்துரைக் கிறது. 


மார்கழி வளர்பிறையில் வரும் ஏகாதசியான, ‘வைகுண்ட ஏகாதசி’ மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியை ‘மோட்ச ஏகாதசி’ என்றும் அழைப்பார்கள்.


நாமும் வைகுண்ட ஏகாதசி விரதம் மேற்கொண்டு 

உபவாசம் இருந்து விஷ்ணுவை நினைத்து தியானிப்போம் அவர் புகழ்பாடும் கீர்த்தனைகளை பாராயணம் செய்வோம் 


இன்றைய தினம் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து இறைவனை காலை சொர்க்க வாசல் சென்று


நம்மிடம் உள்ள கர்வம், சிற்றின்பம், செயலற்ற தன்மை, ஆகியவற்றை துறந்து மனத்தினால் இறைவனிடம் நம்மை ஒப்படைப்பு செய்வோம்.

ஆசி அருட் பெருவோம்...



படித்ததில் எடுத்து தொகுத்தது:  

நா.சு.கார்த்தி

வியாழன், 13 டிசம்பர், 2018

முதல் காதல் நானும் விழுந்தேன் காதலில் பள்ளிப்பருவத்தில்



ஒன்றும் அறியாத பள்ளி பருவ காதல் 

இனிமையானது சுகமானது.!



முதல் காதல் யாரும் மறக்க முடியாத காதல்



நானும் விழுந்தேன் காதலில்


என்னோடு படித்தவல் 

அது ஒரு கனாக்காலம்....1995



பள்ளி பருவத்தில்...


பருவ தாகத்தில்...


அவளின் நினைவு


துளிர் விட்டு மரமானது...எம் மனதில்



தொலைவில் இருந்தாலும்


வார்த்தை அம்பெடுத்து


கடிதத்தில் தொடுத்திடுவாள்...



அருகில் வந்தாலும்


ஆசைமொழி உதிர்த்திடுவாள்...



கவிதையாய்


அவள் தந்த கடிதங்கள்...


சந்தோச வான்நோக்கி


சல்லாபம் இல்லாமல்


சிலகாலம் சிறகடித்தோம்....



பின்பு



மாப்பிள்ளை எனும் வேடனிடம் அகப்பட்டு


இல்வாழ்க்கைக்கு சென்றுவிட்டாள்...



ஒற்றை சிறகோடு


எங்கு நான் பறவேன்...



காலத்தின் வினையறுத்து


கண்கலங்கி நின்றுவிட்டேன்...


அன்று


வாழ்த்த வார்த்தையின்றி


வழிமாறி வந்துவிட்டேன்...

அத்தனையும் என் பள்ளி பருவத்தில்...!



இன்று என் வாழ்க்கை தடம்மாறி 

சென்றுவிட்டது....



சிலகாலம் பழகினாலும்


என் சிந்தனையில் நிற்கிரது...


என் முதல் காதல்.....!

               ( நா.சு.கார்த்தி )

செவ்வாய், 11 டிசம்பர், 2018

ஏன் எனை படைத்தாய் இறைவா???


கூடி மகிழந்த சிலரும்

சொல்லி அழ இருந்த பலரும்

இப்பொழுது என்னோடு பேசுவதே 

இல்லை...



என்னை படைத்த இறைவா

பதில் சொல்...



ஏன் எனக்கு இதயத்தை படைத்தாய்....?

அதில் ஏன் உறவுகளுக்காய் 

எப்பொழுதும்

துடிக்க வைத்தாய்...?

நான் மென்மையான இதயத்துடன் 

பிறந்தது குற்றமா..?



இறைவா நான் வாழுகின்ற இந்த 

வாழ்க்கையிள்...... அனைவரத 

மனதையும்

புண்பட வைத்த.....ஜென்மம்



திருந்தாத ஜென்ம் நான் இருந்தென்ன

 லாபம்

வருந்தாத உள்ளம் நான் வாழ்ந்தென்ன

 லாபம்

இறைவா எனை படைத்தவன் நீயே 



அழைத்து சென்றுவிடு வாழ்ந்த 

வாழ்க்கையும் போதும் 

என் சொற்க்களால் 

உறவுகள் படும் மன கஷ்டமும் போதும்....

இறைவா....!

கைதொழுது கேட்கின்றேன்

வந்துவிடு எனை அழைத்து சென்றுவிடு


                      நா.சு.கார்த்தி

திங்கள், 10 டிசம்பர், 2018

"மகா கவி" பாரதி பிறந்தநாள்


முண்டாசுக் 

கவிஞன்


முரட்டு

மீசைக்காரன்


கண்ணம்மாவின்

காதலன்


காணிநிலம்

கேட்டவன்


கற்பனையில்

கொடிகட்டிப்

பறந்தவன்


குழந்தைகளைக்

குதூகளிக்க

வைத்தவன்

காதலின்

காவியத்தை

வடித்தவன்


சுதந்திரத்தின்

சுவையை

ஊட்டி

உணர்த்தியவன்


பெரும்கவி

பாரதி


அவனே

கவியுலக

சாரதி

கவியுலகின்

தலைவன்

கற்பனையின்

புதல்வன்


அவன்புகழ்

ஓங்குக

பல்லாண்டு

வாழ்த்திட

வயதில்லை

வணங்குகிறேன்

தலைமகனை

கவிஞன்: நா.சு.கார்த்தி


மகா கவி" பாரதி பிறந்தநாள் இன்று..

மகாகவிக்கு சமர்பணம்....

கவிஞன் 

கற்பனை உலகில்

வாழ்கிறான் !! என

யார் சொன்னது ?...

ஒரு

கவிஞனின்

உலகில் தான்..

கற்பனையே வாழ்ந்தது.

என திருத்திக் கொள்ளுங்கள்...


உயிரைப் படைத்தவன்

இறைவன்

மட்டும் தான் !! என

யார் சொன்னது ?...

உயிர் உள்ள

கவிதைகளை

ஒரு கவிஞனும்

படைத்தான்.. என

தெரிந்து கொள்ளுங்கள்...


அடிமைத் தனத்தை

யாரும் விரும்புவதில்லை !! என

யார் சொன்னது ?...

ஒரு

கவிஞனின் கவிதைக்கு

இந்த உலகே

விரும்பி அடிமையானது..என்பதை

நினைவில் கொள்ளுங்கள்...

உயிர் படைப்பை

அழிக்கும் வல்லமை..

எமனுக்கு உண்டு !! என

சொல்பவர்களே.. இவன்

"உயிர் படைப்புகளை"..

அழிக்கும் வல்லமை

எவனுக்கு உண்டு ???...என

கொஞ்சம்

கேட்டுச் சொல்லுங்கள்...

நானும் கவி எழுது கவிஞன் என்பதை

 என்னி மகிழ்ச்சி 

பிறந்தநாள் வாழ்த்த வயதில்லை 

வணங்குதல் நலன்


நா.சு.கார்த்தி

ஞாயிறு, 18 நவம்பர், 2018

( என் மனைவி எனக்காய் ஒரு கவிதை )



ஆயிரம் சொந்தங்களிருந்தும் 

எனக்கென வேண்டும் நீ எனக்கு ,


என் கண்ணீர் துளிகளை

துடைத்திட வேண்டும் நீ எனக்கு ,


உன் கோவ கதிர்கள் என் மீது பட்டு நான் 

தொட்டாற்சிணிங்கியாய் சுருங்கும் போது 

உன் கரங்களினால் தென்றலாய் என்னை 

தழுவிட வேண்டும் நீ எனக்கு ,


கைகளிரெண்டிலும் வளையல்கள் 

மாட்டிட வேண்டும் நீ எனக்கு 

அது கைகளை அழகூட்ட 

வேண்டுமென்பதற்கில்லை 

ஊடலிலும் கூடலிலும் அவை 

உன் நெஞ்சோடு மோதி இசைக்கின்ற 

இசையை கேட்டிட வேண்டுமென்பதற்கே,


என் கண் இமைகளில் 

மையிட வேண்டும் நீ எனக்கு 

அது உனக்கு அழகாய் தொ¢ய 

வேண்டுமென்பதற்கில்லை 

மையிடும் வேளையிலே 

உன் கண்களில் என்னழகை 

பார்த்திட வேண்டுமென்பதற்கே,



மூப்பெய்து தோள் சுருங்கி முதுமை 

அடைந்தாலும் வேண்டும் நீ எனக்கு 

அது ஒருவருகொருவர் துணை நிற்க 

வேண்டுமென்பதற்கில்லை 

இருவரும் சேர்ந்து குழ்ந்தைகளாய் மாறி 

நாம் தொலைத்திட்ட இளைமையை 

தேடிட வேண்டுமென்பதற்கே,

 

மொத்ததில் நான் வாழ்ந்திடும் 

நாட்கள் அனைத்திலும் எனக்கே 

உரியவனாய் வேண்டும் நீ எனக்கு ,


கொக்கரக்கோ...கொக்கரக்கோ...

சேவல் சத்தம் கேட்டதும்... விழித்துவிட்டேன்

அத்தனையும்...

என் கனவுலகில்..முற்றம். !!!


             நா.சு.கார்த்தி....👈

சனி, 3 நவம்பர், 2018

( சித்தி...சித்தப்பா... எப்படி மரப்பேன் உங்களை)



சித்தி.. சித்தப்பா.. உங்கள பத்தி கவி எழுத நினைக்காத நாள் இல்ல...கவி எழுத பக்கங்கள் போதாது..எத எழுத....


பள்ளிப்படிப்பை அறைகுறையாக முடித்து பிழைப்புக்கு வழியின்றி
இருந்த என்னை
சென்னைக்கு அழைத்து வந்து
பருவம் வரை பக்குவமாய்
வளர்த்து விட்டீரே சித்தி சித்தப்பா உங்கள....நான் மரப்பேனா?


என்ன உட்கார வச்சிப்புட்டு
பத்துமாடி எட்டுமாடி
கட்டிடட வேளைபார்த்து நீயும்,
தோட்டவேளை வீட்டுவேளனு சித்தப்பாவும்  என்ன வளர்த்தத..... நான் மரப்பேனா?


தன் பிள்ளைகள் அக்கா பிள்ளைகள் என்று வேற்றுமை பார்க்காத உன்னையும்,
உனக்கு தெரியாமல் அப்பப்போ பத்து இருபதுரூபாயா மறச்சி குடுத்த சித்தப்பாவயும் ....நான் மரப்பேனா?



வார நாள் முழுவதும் வேளைபார்த்துபுட்டு  சனிக்கிழம சம்பளம் வாங்கி வந்து வீட்டுல வச்சிபுட்டு நீ தூங்கினதும்,
ஏதோ நன்றி மறந்த நானும் ஒருதடவ அந்த பனத்த எடுத்துட்டு ஊருக்கு ஓடினதும்,
என் தப்ப பெரியதா நீயும் நினைக்காம என்ன அரைவனைச்சத....நான் மரப்பேனா?


எனக்கு திருமணம் முடிக்க நீ பட்ட கஷ்டத்தையும், கல்யான பந்தல் கலைஞ்சுடுச்சி
வா டா சரி பன்னாத்தான் உனக்கு கல்யாணம்னு நீ சொல்லி அத்தனையும் சரிசெஞ்சி கல்யாணத்த முடிச்சி வெச்சத.... நான் மரப்பேனா?


என்று எங்கள் வாழ்க்கை புத்தகத்தில் மரக்காத முதல் அத்தியாயம் சித்தி சித்தப்பா...எப்படி மரப்பேன் உங்களை..!!!

           

                    ( மகன்:   நா.சு.கார்த்தி )

                             

                            (கவி தொடரும்)

வியாழன், 13 செப்டம்பர், 2018

எங்கள் அன்பு பேரன் கவியரசனுக்கு முதலாம் ஆன்டு பிறந்த நாள் வாழ்த்துக்கள,!




எங்கள் அன்பு பேரன்
கவியரசனுக்கு
முதலாம் ஆன்டு
பிறந்த நாள் வாழ்த்துக்கள,!











வானத்தில் நட்சத்திரங்கள்
வாழ்த்து சொல்ல
வரிசையில் நிற்கின்றார்கள்,!



உனக்கு வாழ்த்து சொல்ல 
ரோஜா மொத்தத் தோட்டமும்
முண்டியடித்து வருகிறது,!



தேனிலும் இனியவன்
தேகிட்டாத சுவையவன்
முள்ளில்லா மலரவன்
முகம் காட்டும் நிலவவன்,!



மெல்ல சிரிக்கையில்
சிதறிடும் முத்துக்கள்
விம்மி வெடிக்கையில்
மிரண்டிடும் கடல் அலைகள்,!



கவர்ந்திடுவான்
விழிகளால்
கவலை தீர்ப்பான்
கனி மொழியினால,!



சுட்டி தனமாய்
கிட்ட வந்தாய்
முட்டி மோதி ஆட்டம் போட்டாய்,!



சிரித்துச் சிரித்து
எங்களை சிரிக்க வைத்தாய்
அழுதும் உன் அழகால்
சிரிக்க வைத்தாய்,!



இன்று மலர்ந்த
கோடானுக் கோடி மலர்கள்
சார்பாக உன்னை வாழ்த்துகிறோம்..,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...🌹
   


         ( தாத்தாக்கள் + பாட்டிகள் )
    ஆக்கம் : நா.சு.கார்த்தி....👈

புதன், 12 செப்டம்பர், 2018

🙏வினாயகர் சதூர்த்தி வாழ்த்துக்கள்🙏



       




வினாயகர் சதூர்த்தி
வாழ்த்துக்கள்




கண் திருஷ்டி கணபதியே...
எங்கள்
கவலை தீர்க்கும் கணபதியே..!





விடியும் பொழுதில் எழுந்துவிட்டேன்...
வினாயகனே உன்னை வணங்கிவிட்டேன்..!




கொழுக்கொட்டையை விரும்பும் பிள்ளையாரே... எங்கள் எதிரியின்
கொழுப்புகளை அடக்குகின்ற பிள்றையாரே..!




உன்னை கைதொழுது
வணங்குகிறோம் எம் மக்களை
காப்பாய் என்றும் ...!!!




என் இனிய
வினாயகர் சதூர்த்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்.!!!
     



                                           👉நா.சு.கார்த்தி

செவ்வாய், 4 செப்டம்பர், 2018

🙏 (ஆசிரியர் தின வாழ்த்துக்கள்) 🙏











இரட்டனை கென்னடி கான்வென்ட்லயும்
இரட்டனை அரசு மேல்நிலை பள்ளிலயும்
நான் படித்த
அன்புள்ளவாத்திக்கு



வெவரம் தெரிஞ்ச ஒடனே
பள்ளிக்கு போடா மவனேன்னு
வம்படியா இழுத்து வந்து
உங்க கிட்ட விட்டாக



அரை டவுசர தூக்கி பிடிச்சினு
மூக்கொழுகி நின்னப்ப
என் சிலேட்டுல
கைபிடிச்சி அ,ஆ வரைஞ்ச
ஆசான்களே



அன்பால சொன்ன பாடம்லாம்
நெனப்பால நிக்குதைய்யா
தூக்கத்துல எழுப்புனாலும்
அந்த மனப்பாடம் மறக்கலய்யா



யார்யாரோ வந்தாங்க 
யார்யாரோ போனாங்க
கழுத வயச நான் கடந்தும்
எனக்கு வாத்தின்னா உங்க நெனப்பு
மறக்காம தோணுதய்யா



பச்ச மண்ணு தான்
என்ன மனுசனா மாத்த
நீங்க பட்ட பாடு பெரும்பாடு
அடிச்சும் சொன்னீங்க 
அணைச்சும் சொன்னீங்க
அதால தான் 
எப்பவுமே மனசுல நின்னீங்க



எவ்வளவோ ஒசரம் நான் வந்தாலும்
எப்போதும் உங்கள பத்தி தான் இருக்குது என் பேச்சு
நீங்க தானய்யா என் முன்னேற்ற மூச்சு
இது நீங்க வளத்த புள்ள பேசும் பேச்சு



நீங்க நல்லா இருக்கிகிங்களோ 
இல்லையோ
உங்களால ஒசந்து இருக்கேன் 
மெய்யா
ஒரு வார்த்தையும் 
சொல்லல நான் பொய்யா



இரட்டனை கென்னடி கான்வென்ட்லயும்
இரட்டனை அரசு மேல்நிலை பள்ளிலயும்
நான் பயிலயில
எனக்கு பாடம் எடுத்த ஆசான்களே
எப்படி மறப்பேன்
எப்பவுமே என் குருவே நீங்கதானய்யா



இந்த ஆசிரியர் தினத்தில 
எனக்குல்ல 
எனக்குனு கல்வி போதிச்ச ஆசானை மனம் நினைக்குதயா
அனைத்துஆசிரியர்களுக்கும்
ஆசிரியர்தின_நல்வாழ்த்துகள்.🙏
           



           👉..... நா.சு.கார்த்தி
                      நாரேரிக்குப்பம்
                      இரட்டனை பஞ்சாயத்து
                      கைபேசி: 9884386544





                                   ( இதில் சில வரிகள் மட்டும்
                   அடுத்தவர் கவிதைகளில் இருந்து எடுத்து 
                                  நான் புதிதாக தொகுத்தது )

திங்கள், 3 செப்டம்பர், 2018

(நினைவேந்தல்) 😢😓🙏

                         (நினைவேந்தல்)







அப்பா....
நீ வின்னுலகம் சென்று
வருடங்கள் பல கடந்தோடி விட்டது...
கண்ணீர் விழிகளுடன்
இன்று நினைவேந்தல்....





புன்னகை முகத்தோடு
பொருமையில் தர்மராகவும்.,
வீரத்தில் அர்ஜுனனாகவும்.,
கோபத்தில் பீமநாகவும்.,
வாழ்வில்
ஒற்றுமை உணர்தும் நகுல சகாதேவனாகவும்.,
எங்களோடு இருந்த அப்பா.,





நீங்கள் மகள்கள் அல்ல.
ஐய்வரும் பஞ்சபாண்டவர்கள்
என்றுரைப்பாயே அப்பா.,





பஞ்சபாண்டவர்களை காத்து நின்ற கிருஷ்ணரைப்போல...
எங்களை காத்த பகவானாய் இருந்தாயே...





அப்பா நினைத்து பார்க்கிறோம்
இந்த நினைவேந்தல் நாளில்...





எங்கள் கண்விழிகள் கலங்க வருந்துகிறோம் அப்பா....
எப்பொழுது கிடைக்கும் அப்பா உன் திருமுக தரிசனம்..😓😭😓😭




 
                               ( மகள்கள் )

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

கண்ணாடி பேழையில் அடைக்காதீர்கள்






நான் இறந்த பின்
கண்ணாடி பேழைக்குள்
அடைக்காதீர்



அம்மா அப்பா என்னை
கடைசியாக மடியில்
வைத்துக் கொள்ள
நினைக்கலாம்..!!!



அக்கா தங்கை என் கை
பிடித்து அழ
நினைக்கலாம்..!!




துனைவியாரோ கடைசி
நிமிடத்திலாவது
அருகில் இருக்க
நினைக்கலாம்..!!



பெற்ற குழந்தை என்னை
தட்டி எழப்ப
நினைக்கலாம்..!!



தொலைந்த தோழர்
தோழி
கடைசியாய் என் கரம்
கோர்க்க வரலாம்..!!



கூட பழகிய நண்பர்கள்
கடைசியாய்
கட்டித் தழுவி கதறி
அழுதிட விரும்பலாம்..!!



அன்பைக் காட்டத் தெரியாத
நான் விரும்பியோர்
கடைசியாய் என் தலைக்
கோதி பாசம் காட்ட ஆசைப்படலாம்..!!



உறவற்ற பெயரற்ற செய்
நன்றி மறவா யாரோ
கடைசியாய் என் பாதம்
தொட விரும்பலாம்..!!



உயிரற்று
போனால்தான் என்ன...
கடைசியாய் எனக்கும்
தேவையாய் சில
வருடல்கள்
இறந்த பின்
கண்ணாடி பேழைக்குள்
அடைக்காதீர்...!!



எல்லாம் அந்த ஒரே ஒரு
நாள் மட்டுமே..!!
கண்ணீருடன்....



நிதர்சனமான உண்மையாக தெரிந்தால் பகிருங்கள் ...


              .................. நா.சு.கா


தங்கைக்கு ஆடி சீர்







ஆடி மாதம் என்றாலே
சகோதிரிகளின் மாதம்




ஆடி சீர் வாங்குவதும்
கொடுப்பதும் ஒரே
ஜாலியோ ஜிம்கானா தான்




என்ன  சொல்லுறது சரி தானே




உடன் பிறந்த
உடன் பிறவா
சகோதிரிகளே




தன் தகுதிக்கு மீறி கடன் வாங்கி




தங்கை அவள் சந்தோசத்துக்காக அண்ணன் அவன் சந்தோசமாய்
ஆடி சீர் செய்து ....




புகுந்த வீடு..அனுப்பும்...
வைபவம் இன்று.




வாழ்த்துங்கள் தோழமைகளே
என் தங்கை அவள்
வாழ்வில் நலம்சூய.!


                    அண்ணன் :  நா.சு.கார்த்தி

சனி, 18 ஆகஸ்ட், 2018

(சில மனிதனிடம் மனிதநேயம் வளர்ப்போம் மனிதநேயம்)


முதியோருக்கு பேருந்தில் இடமளிப்பதும் மனிதநேயம்
கவலைப்படுவோருக்கு ஆறுதல் கூறுவதும் மனிதநேயம்




துன்பப்படுவோருக்கு தன்னால் முடிந்த உதவி செய்வதும் மனிதநேயம்




தனக்கு தெரிந்ததை சொல்லிக் கொடுப்பதும் மனிதநேயம்




மற்றவர் மனம் புண்படா வண்ணம் நடப்பதும் மனிதநேயம்




தன்னலமற்ற இறைவழிபாடும் மனிதநேயம்




மனிதநேயம் என்பது வெளியில் தேடும் பொருளல்ல




உனக்குள்ளிருந்து உன்னை செயல்படத் தூண்டும்
உன் மனசாட்சியே மனிதநேயம்...




சில மனிதனிடம்
மனித நேயம் வளர்ப்போம்




இன்று மனிதநேயம் தினம்
வாழ்த்துக்கள் ........நா.சு.கா...👈