திங்கள், 31 டிசம்பர், 2018

புத்தாண்டு வாழ்த்து கவிதை...!


பூத்தது புது வருடம்

பூத்து குழுங்கட்டும் புது வசந்தம்


நடந்து முடிந்தது முடிந்தது - இனி

நடப்பவை நல்லபடியாக நடக்கட்டும்.


எதிர்காலத்தை திட்டமிடுவோம்

எண்ணங்களை வசப்படுத்துவோம்


கடந்த வருடம்- நம்

கஷ்டங்களை கொண்டு போகட்டும்


புது வருடம் – பல

புதுமைகள் காண உதவட்டும்

நினைவுகளாய் இருக்கும் கனவுகள்

நிஜமாய் மாறட்டும்


இன்னொரு ஜென்மம் உண்டென்றால்

இந்த சொந்தங்கள் தொடரட்டும்


நம் வீட்டு சொந்தங்கள்

நலம் வாழ நாளும் பிராத்திப்போம்...!

 

அனைவரது வாழ்வும் நலமும்...வளமும்...
பெற்று 2019 ம் ஆண்டு மகிழ்ச்சியாக அமையட்டும்....ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்..!..நா.சு.கார்த்தி

புத்தாண்டு வாழ்த்து கவிதை...!


நாம் கடந்து வந்த
வாழ்க்கை புத்தகத்தில்,

வருடங்கள் மாதங்கள்
வாரங்கள் நாட்கள்
நிமிடங்கள் நொடிகளென
அனைத்து பக்கங்களை
புரட்டிப் பார்த்தால்,
நமக்கொன்று ஒன்று மட்டும் புரியும்
புத்தாண்டு என்பது
வருங்கால தேதிகளை மாற்றிவிடும்
ஒரு நாள்தான் என்று ;


கடந்து வந்த பாதைகள்
கடக்கவிருக்கும் பாதைகள்
நாம் சந்திக்க போகும்
அனுபவங்கள் யாருக்கும் தெரியாது

திசை திரும்பிவிட்ட
படகுமேலேரி பயணிக்கும் நம்மை
இந்த புத்தாண்டு
நம் கனவு கரையில் போய் சேர்க்கட்டும்;


மாற்றங்கள் அனைத்தும் பொதுவாயினும்
நம்மில் புதுப்புது மாற்றஙள் தோன்றி
நம் வாழ்வில் இன்பமும் அமைதியும்
என்றும் நிலைத்துவிட
இறைவனிடம் பிரார்த்தித்து
என் புத்தாண்டு வாழ்த்தினை சமர்ப்பிக்கிறேன்


அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே...


நன்றி. -நட்புடன் நா.சு.கார்த்தி

திங்கள், 17 டிசம்பர், 2018

வைகுண்ட ஏகாதசி 18/12/2018


ஓம் நமோ நாராயணா

வைகுண்ட ஏகாதசி

18/12/2018


வைகுண்ட ஏகாதசி விஷ்ணு ஆலயங்கள் அனைத்திலும் சொர்க்க வாசல் திறப்பு விழா நடத்தப்படும். 


இறைவனை தொழும் ஜீவாத்மா, வைகுண்ட வாசலில் வழியாக பரமாத்மாவை சேருகிறது என்ற ஐதீகத்தின் அடிப்படையில், இந்த சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெறு கிறது. 


இந்த விழா அதிகாலை வேளையிலேயே நடை பெறும். 

இதில் நாம் கலந்து கொண்டு, இறைவனுக்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளை கண்டுகளித்து பயன் அடையலாம்


விஷ்ணுவை வேண்டி வழிபடும் விரதங்களில் முதன்மையானதாக இருப்பது ‘ஏகாதசி விரதம்’. இந்த விரதத்தை கடைப்பிடிப்பது ‘அஸ்வமேத யாகம்’ செய்த பலனைக் கொடுக்கும் என்கிறது புராணங்கள்.

காயத்ரிக்கு ஈடான மந்திரம் இல்லை; தாய்க்கு சமமான தெய்வம் இல்லை; கங்கைக்கு ஈடான தீர்த்தம் இல்லை; ஏகாதசிக்கு சமமான விரதம் இல்லை’ 


என்று இந்த விரதத்தை மகிமைப் பற்றி அக்னி புராணம் எடுத்துரைக் கிறது. 


மார்கழி வளர்பிறையில் வரும் ஏகாதசியான, ‘வைகுண்ட ஏகாதசி’ மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியை ‘மோட்ச ஏகாதசி’ என்றும் அழைப்பார்கள்.


நாமும் வைகுண்ட ஏகாதசி விரதம் மேற்கொண்டு 

உபவாசம் இருந்து விஷ்ணுவை நினைத்து தியானிப்போம் அவர் புகழ்பாடும் கீர்த்தனைகளை பாராயணம் செய்வோம் 


இன்றைய தினம் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து இறைவனை காலை சொர்க்க வாசல் சென்று


நம்மிடம் உள்ள கர்வம், சிற்றின்பம், செயலற்ற தன்மை, ஆகியவற்றை துறந்து மனத்தினால் இறைவனிடம் நம்மை ஒப்படைப்பு செய்வோம்.

ஆசி அருட் பெருவோம்...



படித்ததில் எடுத்து தொகுத்தது:  

நா.சு.கார்த்தி

வியாழன், 13 டிசம்பர், 2018

முதல் காதல் நானும் விழுந்தேன் காதலில் பள்ளிப்பருவத்தில்



ஒன்றும் அறியாத பள்ளி பருவ காதல் 

இனிமையானது சுகமானது.!



முதல் காதல் யாரும் மறக்க முடியாத காதல்



நானும் விழுந்தேன் காதலில்


என்னோடு படித்தவல் 

அது ஒரு கனாக்காலம்....1995



பள்ளி பருவத்தில்...


பருவ தாகத்தில்...


அவளின் நினைவு


துளிர் விட்டு மரமானது...எம் மனதில்



தொலைவில் இருந்தாலும்


வார்த்தை அம்பெடுத்து


கடிதத்தில் தொடுத்திடுவாள்...



அருகில் வந்தாலும்


ஆசைமொழி உதிர்த்திடுவாள்...



கவிதையாய்


அவள் தந்த கடிதங்கள்...


சந்தோச வான்நோக்கி


சல்லாபம் இல்லாமல்


சிலகாலம் சிறகடித்தோம்....



பின்பு



மாப்பிள்ளை எனும் வேடனிடம் அகப்பட்டு


இல்வாழ்க்கைக்கு சென்றுவிட்டாள்...



ஒற்றை சிறகோடு


எங்கு நான் பறவேன்...



காலத்தின் வினையறுத்து


கண்கலங்கி நின்றுவிட்டேன்...


அன்று


வாழ்த்த வார்த்தையின்றி


வழிமாறி வந்துவிட்டேன்...

அத்தனையும் என் பள்ளி பருவத்தில்...!



இன்று என் வாழ்க்கை தடம்மாறி 

சென்றுவிட்டது....



சிலகாலம் பழகினாலும்


என் சிந்தனையில் நிற்கிரது...


என் முதல் காதல்.....!

               ( நா.சு.கார்த்தி )

செவ்வாய், 11 டிசம்பர், 2018

ஏன் எனை படைத்தாய் இறைவா???


கூடி மகிழந்த சிலரும்

சொல்லி அழ இருந்த பலரும்

இப்பொழுது என்னோடு பேசுவதே 

இல்லை...



என்னை படைத்த இறைவா

பதில் சொல்...



ஏன் எனக்கு இதயத்தை படைத்தாய்....?

அதில் ஏன் உறவுகளுக்காய் 

எப்பொழுதும்

துடிக்க வைத்தாய்...?

நான் மென்மையான இதயத்துடன் 

பிறந்தது குற்றமா..?



இறைவா நான் வாழுகின்ற இந்த 

வாழ்க்கையிள்...... அனைவரத 

மனதையும்

புண்பட வைத்த.....ஜென்மம்



திருந்தாத ஜென்ம் நான் இருந்தென்ன

 லாபம்

வருந்தாத உள்ளம் நான் வாழ்ந்தென்ன

 லாபம்

இறைவா எனை படைத்தவன் நீயே 



அழைத்து சென்றுவிடு வாழ்ந்த 

வாழ்க்கையும் போதும் 

என் சொற்க்களால் 

உறவுகள் படும் மன கஷ்டமும் போதும்....

இறைவா....!

கைதொழுது கேட்கின்றேன்

வந்துவிடு எனை அழைத்து சென்றுவிடு


                      நா.சு.கார்த்தி

திங்கள், 10 டிசம்பர், 2018

"மகா கவி" பாரதி பிறந்தநாள்


முண்டாசுக் 

கவிஞன்


முரட்டு

மீசைக்காரன்


கண்ணம்மாவின்

காதலன்


காணிநிலம்

கேட்டவன்


கற்பனையில்

கொடிகட்டிப்

பறந்தவன்


குழந்தைகளைக்

குதூகளிக்க

வைத்தவன்

காதலின்

காவியத்தை

வடித்தவன்


சுதந்திரத்தின்

சுவையை

ஊட்டி

உணர்த்தியவன்


பெரும்கவி

பாரதி


அவனே

கவியுலக

சாரதி

கவியுலகின்

தலைவன்

கற்பனையின்

புதல்வன்


அவன்புகழ்

ஓங்குக

பல்லாண்டு

வாழ்த்திட

வயதில்லை

வணங்குகிறேன்

தலைமகனை

கவிஞன்: நா.சு.கார்த்தி


மகா கவி" பாரதி பிறந்தநாள் இன்று..

மகாகவிக்கு சமர்பணம்....

கவிஞன் 

கற்பனை உலகில்

வாழ்கிறான் !! என

யார் சொன்னது ?...

ஒரு

கவிஞனின்

உலகில் தான்..

கற்பனையே வாழ்ந்தது.

என திருத்திக் கொள்ளுங்கள்...


உயிரைப் படைத்தவன்

இறைவன்

மட்டும் தான் !! என

யார் சொன்னது ?...

உயிர் உள்ள

கவிதைகளை

ஒரு கவிஞனும்

படைத்தான்.. என

தெரிந்து கொள்ளுங்கள்...


அடிமைத் தனத்தை

யாரும் விரும்புவதில்லை !! என

யார் சொன்னது ?...

ஒரு

கவிஞனின் கவிதைக்கு

இந்த உலகே

விரும்பி அடிமையானது..என்பதை

நினைவில் கொள்ளுங்கள்...

உயிர் படைப்பை

அழிக்கும் வல்லமை..

எமனுக்கு உண்டு !! என

சொல்பவர்களே.. இவன்

"உயிர் படைப்புகளை"..

அழிக்கும் வல்லமை

எவனுக்கு உண்டு ???...என

கொஞ்சம்

கேட்டுச் சொல்லுங்கள்...

நானும் கவி எழுது கவிஞன் என்பதை

 என்னி மகிழ்ச்சி 

பிறந்தநாள் வாழ்த்த வயதில்லை 

வணங்குதல் நலன்


நா.சு.கார்த்தி