அற்புத மனிதம்....செவிலியர்!
தன் இன்பம் மறப்பர்,
பிறர் இன்பம் வாழ்த்துவார்,
தன் துன்பம் சுமப்பார்,
பிறர் துன்பத்திற்கு ஆறுதல் கூறுவார்,
பிறர் தூங்க-தன் தூக்கம் தொலைப்பர்,
அடுத்தவரின் வலி நிவாரணியாகமாறி தன் வலி பொறுப்பர்,
எல்லோரின் சகோதரமாய் எப்பொழுதும் வலம் வருவார்,
போற்றுதலுக்கு மயங்கார்,
தூற்றுதலுக்கு செவி சாய்ப்பார்,
தன்னலம் மறப்பார்,
பிறர் நலம் பேணுவார்,
பிறப்பை சொல்லி மகிழ்வார்,
இறப்பை சொல்ல தெரியாமல் தவிப்பார்,
அவர்---!!!!!!!
ஒளிவிளக்கேற்றி அல்ல
ஒளி விளக்குடன்
சத்தியப்பிரமாணம் எடுத்து
பணி புரியும்-செவிலியர்
செயல்முறையை பட்டயம் வழங்கும்,
உணர்வின் வெளிப்பாட்டை எந்த
பட்டயமும் வழங்குவதில்லை,
பணியின் அனுபவத்தால்
நல் உணர்வு குவியலாய் வாழும்
தியாகத்தின் திருஉருவங்கள்-
செவிலியர்கள்!!!!!
புண்ணியம் தேட அவசியமில்லா
அற்புத மனிதம்--
வாழ்க செவிலியர் பணி
என் இனிய உழைப்பாளர் தினம்
மற்றும்
என் இனிய சர்வதேச செவிலியர் தினம் (International Nurses Day )
வாழ்த்துக்கள்.....
நா.சு.கா.......
செவிலியர்களை போற்றுவோம்
பதிலளிநீக்கு