வெள்ளி, 20 ஏப்ரல், 2018

தாய்மாமன் வாழ்த்து

குட்டிபெண்ணே ...
அமராவதி யே...
எங்கள் அக்காள் பெற்ற அழகே...
தங்கப்பெண்ணே
என்ன வேணும்;
தயங்காம நீயும் கேளு!
தாய்மாமன்கள் நாங்கள் இருக்க...!
தடையில்ல நீயும் சொல்லு...!
கார்முகில கொண்டு
வாரோம் தங்கமயில் நீராட!
தாரகைய கோர்த்துத் தாரோம், பொன்னுமயில் நீ சூட!
வானவில்லும் வந்திடுமா கன்னங்களில் வண்ணமிட!
ராவெடுத்து மைகுழைத்து கண்களிலே தீட்டிவிட!
ஊர்மெசச சீதனமும்
நீ மெச்ச காஞ்சிப்பட்டும்
கொண்டு வரோம்
மாமன்கள் உனக்காக!
பட்டுப்பொண்ணே!
நீ சூட செண்டுமல்லி
பூத்திருக்கு-உன் விரல்
பேசும் அழகை காண வெண்ணிலவோ
தவமிருக்கு!
முத்துக்களும் சிதறுது!வெண்சங்கின் சிரிப்பொலியில்!
கதிரொளியும் கூசுது-உன் பொன்வண்ண தேகம் கண்டு…
எங்கள் அக்காள் பெற்ற
தங்கமயிலே
அமராவதி
ராசாத்தி போல் நீ
வாழ எங்கள் உள்ளம்
வாழ்த்துது-பல்லாண்டு நீ வாழ
மாமன்கள் வாழ்த்து இது.......!!!!!

                  ((( அன்பு மாமன்கள் )))
   
               கவியாக்கம்: நா.சு.கார்த்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக