செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

கண்ணாடி பேழையில் அடைக்காதீர்கள்






நான் இறந்த பின்
கண்ணாடி பேழைக்குள்
அடைக்காதீர்



அம்மா அப்பா என்னை
கடைசியாக மடியில்
வைத்துக் கொள்ள
நினைக்கலாம்..!!!



அக்கா தங்கை என் கை
பிடித்து அழ
நினைக்கலாம்..!!




துனைவியாரோ கடைசி
நிமிடத்திலாவது
அருகில் இருக்க
நினைக்கலாம்..!!



பெற்ற குழந்தை என்னை
தட்டி எழப்ப
நினைக்கலாம்..!!



தொலைந்த தோழர்
தோழி
கடைசியாய் என் கரம்
கோர்க்க வரலாம்..!!



கூட பழகிய நண்பர்கள்
கடைசியாய்
கட்டித் தழுவி கதறி
அழுதிட விரும்பலாம்..!!



அன்பைக் காட்டத் தெரியாத
நான் விரும்பியோர்
கடைசியாய் என் தலைக்
கோதி பாசம் காட்ட ஆசைப்படலாம்..!!



உறவற்ற பெயரற்ற செய்
நன்றி மறவா யாரோ
கடைசியாய் என் பாதம்
தொட விரும்பலாம்..!!



உயிரற்று
போனால்தான் என்ன...
கடைசியாய் எனக்கும்
தேவையாய் சில
வருடல்கள்
இறந்த பின்
கண்ணாடி பேழைக்குள்
அடைக்காதீர்...!!



எல்லாம் அந்த ஒரே ஒரு
நாள் மட்டுமே..!!
கண்ணீருடன்....



நிதர்சனமான உண்மையாக தெரிந்தால் பகிருங்கள் ...


              .................. நா.சு.கா


தங்கைக்கு ஆடி சீர்







ஆடி மாதம் என்றாலே
சகோதிரிகளின் மாதம்




ஆடி சீர் வாங்குவதும்
கொடுப்பதும் ஒரே
ஜாலியோ ஜிம்கானா தான்




என்ன  சொல்லுறது சரி தானே




உடன் பிறந்த
உடன் பிறவா
சகோதிரிகளே




தன் தகுதிக்கு மீறி கடன் வாங்கி




தங்கை அவள் சந்தோசத்துக்காக அண்ணன் அவன் சந்தோசமாய்
ஆடி சீர் செய்து ....




புகுந்த வீடு..அனுப்பும்...
வைபவம் இன்று.




வாழ்த்துங்கள் தோழமைகளே
என் தங்கை அவள்
வாழ்வில் நலம்சூய.!


                    அண்ணன் :  நா.சு.கார்த்தி

சனி, 18 ஆகஸ்ட், 2018

(சில மனிதனிடம் மனிதநேயம் வளர்ப்போம் மனிதநேயம்)


முதியோருக்கு பேருந்தில் இடமளிப்பதும் மனிதநேயம்
கவலைப்படுவோருக்கு ஆறுதல் கூறுவதும் மனிதநேயம்




துன்பப்படுவோருக்கு தன்னால் முடிந்த உதவி செய்வதும் மனிதநேயம்




தனக்கு தெரிந்ததை சொல்லிக் கொடுப்பதும் மனிதநேயம்




மற்றவர் மனம் புண்படா வண்ணம் நடப்பதும் மனிதநேயம்




தன்னலமற்ற இறைவழிபாடும் மனிதநேயம்




மனிதநேயம் என்பது வெளியில் தேடும் பொருளல்ல




உனக்குள்ளிருந்து உன்னை செயல்படத் தூண்டும்
உன் மனசாட்சியே மனிதநேயம்...




சில மனிதனிடம்
மனித நேயம் வளர்ப்போம்




இன்று மனிதநேயம் தினம்
வாழ்த்துக்கள் ........நா.சு.கா...👈




செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

அண்ணணுக்கு தம்பியின் பிறந்தநாள் வாழ்த்து



அண்ணா!




பெரியவயது பெரிய கனவுகள் 
சீராக செம்மையாக வளர வேண்டும்!




இதழ்கள் சிரித்து வாழ 
இதயம் இனிமை காண வேண்டும்!




அகவை ஒன்று கூட 
அளவற்ற்ற மகிழ்ச்சி காண வேண்டும்!




விதியையும் வீதியில் நிறுத்துபவனாக 
‌வீரநடை நீ போட வேண்டும்




நல்வாழ்வு நீ வாழ்ந்து 
நலம் நாளும் பெற வேண்டும்!




கவிதை கண்ட வரிகள் 
கற்பனை அல்லாத மெய்யாக மாற 
கடவுளை வேண்டுகிறேன்!




இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!




                                                     தம்பி ........Na.su.karthi....👈

சுதந்திர தினம் வாழ்த்துக்கள்.🌺





சுதந்திர தினம்



வெறும் நாளல்ல



திருநாளை


கொண்டாடுவோம்


இந்தியனாய் பிறந்ததில்


பெருமை கொள்வோம்


சுதந்திர தியாகம் எல்லாம்



பாடமானது போதாது



மனபாடம் ஆக வேண்டும்


ஓவ்வொருக்கும்



நம் நெஞ்சில் சுமப்பது வெறும் கொடியல்ல



நம் தேசிய கொடியும் தொப்புள் கோடி பந்தம்



இந்தியன் என்ற பெருமை


எல்லோருக்கும்

சொந்தம்!!!





சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்
         
                     


                             .........Na.su.karthi 👈

சனி, 4 ஆகஸ்ட், 2018

( நண்பர்கள் தினம் வாழ்த்துக்கள் ) 👫


நண்பர்கள் தினம்
வாழ்த்து..


மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு...



குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு...



காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு...



வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு...



முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...







நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...



தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...



துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...



மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...



நலமாக நாமிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்..


அனைவருக்கும் என் இனிய
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.!




                    na.su.ka.......👈

⭐ஆடி கிருத்திகை சிறப்பு ! ⭐



       ⭐ஆடி கிருத்திகை சிறப்பு ! ⭐





 ⭐முருகப்பெருமானுக்கு ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில், தைப்பு+சம், தை கிருத்திகை, பங்குனி உத்திரம், ஆடி கிருத்திகை, கந்தசஷ்டி விரதம் ஆகியவை முக்கியமான நாட்களாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம், முருகனுக்கு மிகவும் உகந்த நட்சத்திரமாகும்.




🌠 கார்த்திகை என்பது முருகனின் பெயர்களுள் ஒன்றான கார்த்திகேயன் என்ற பெயரை குறிக்கும். அதுவே காலப்போக்கில் கிருத்திகை என்று மருவியுள்ளது. எல்லா மாதங்களிலும் கிருத்திகை வரும். ஆனால் ஆடிக்கிருத்திகை போன்ற சிறப்பு தை மாதக் கிருத்திகையில் கூட இருக்காது.



🌠 உலகம் முழுவதும் பல்வேறு தலங்களில் முருகப்பெருமான் குடிகொண்டிருந்தாலும் தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழநி, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவை முக்கியமானவை. இந்த படை வீடுகளில் கொண்டாடப்படும் பல்வேறு திருவிழாக்கள், உற்சவங்களில் ஆடி கிருத்திகை விழாவும் ஒன்று.



🌠 கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப்பெருமானின் நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் விசேஷம் ஆகும். உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். எல்லா முருகன் கோவில்களிலும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, வீதிஉலா என விமர்சையாக நடக்கும்.




🌠 தை மாத கார்த்திகையை விட ஆடி மாதக் கார்த்திகை சிறப்பானதாகும். இது தேவர்களின் மாலைக் காலம் ஆகும். இக்காலத்தில் உப்பில்லா உணவை எடுத்துக் உண்டு கார்த்திகை விரதம் இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது. பலரும், ஆடி மாதத்தில் இருந்து துவங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிப்பார்கள்.



🌠 நட்சத்திரங்களில் கிருத்திகையும் சிறப்பு வாய்ந்தவையாகும். முருகன் பிறந்தது விசாக நட்சத்திரம் என்று சொல்லப்பட்டாலும், அவனைப் பாலு}ட்டி, சீராட்டி வளர்த்தது கார்த்திகைப் பெண்கள் என்பதால் அவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.



 இன்று ஆடிக்கிருத்திகை என்பதால் முருகனை மனமுருக வழிபட்டு அருளை பெறுவோமாக..



வாழ்த்துக்கள்.!




     நா.சு.கா.....👈

கவிதை: வேண்டாம் இந்த உறவுகள்




வேண்டாம் இந்த உறவுகள்
எதுவும் வேண்டாம்
கவலையினிலே ரனத்தை பாய்ச்சும் உறவுகள்


கண்ணீரிலும் வடு பாய்ச்சும் உறவுகள்
அவர்களின் தேவைக்கு நம்மை பகடைகாயாக்கும் உறவுகள்
நமது கனவுகளை அடியோடு கொன்றிடும் உறவுகள்



அவர்களின் ஆசை தான் முக்கியம்
நமது மனதில் ரனத்தை பாய்ச்சிட
நமது காயம் தான் உறவுகளின் மகிழ்ச்சி



உறவுகளுக்காகவே வாழ்ந்து வாழ்ந்து அடியோடு சாயும் நிலை தான் எனது நிலை
இந்நிலை போதும் என்று தூக்கி எறிந்தால் விரோதி என்ற பட்டம் போதும்



ஏன் பிறந்தோம் என்று நினைக்க வைக்கும் உறவுகளிடம் சிக்கி தவிக்கும் நிலை தான் என் நிலை



மனக்கவலையுடன்....



               😂😓😂😓😂😓 நா.சு.கா 👈