சனி, 21 ஜூலை, 2018

🙏🔥🔥🔥(குலதெய்வ வழிபாடு)🔥🔥🔥🙏

🙏(குலதெய்வ வழிபாடு)🙏


அமெரிக்கால பொறந்தாலும்
ஆப்பிரிக்கால பொறந்தாலும்,


விடுப்பு எடுக்கையில
ஓடிப்போய் கிராமத்தில்,


ஊருசனம் பார்த்துபுட்டு
உறவுகளைச் சேர்த்துக்கிட்டு,


காரு, வேனு எடுத்துகிட்டு
கல்லுமுள்ளுப் பாதைதாண்டி,


சென்று சேருமிடம்
குலதெய்வச் சாமிகோவில்.


மண்குதிரை அணிவகுக்க
காடுகளும் வரவேற்கும்,


மஞ்சள் ஆடைஅணிந்து
மங்கள மகிழ்ச்சி ஏராளம்.


படர்ந்த மரநிழலில்
உதறிப் பாய்விரித்து,


சின்னஞ்சிறு கதைகள்
சிரிப்புக் கும்மாளங்களில்,


சிலுசிலுக்கும் மரஇலைகள்
படபடக்கும் பட்சினங்கள்.


சண்டைகொண்டு விளையாடும்
சளைக்காத சிறுவர்கூட்டம்.


பொங்கலிட்டுக் குலவையிட
சங்கமிக்கும் பெண்டிர்.


சந்தனம் பொட்டிட்டு
விழிதெரியும் குலதெய்வம்.


உறவுகள் கூடிநிற்க
படபடப்பு ஆரம்பம் ...


இன்றுவரை நடைமுறை,
நாளை எப்படியோ ?
   என்றும் எனக்குன்டு குலதெய்வ நம்பிக்கை

         
Na.su.ka.....👈

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக