உன் அம்மாவின் ஆண்பிள்ளைக்
கனவுக்கும்,
உன் அப்பாவின் தலைமுறைக்கு
வளம் தந்த,
செல்ல மகன் ஹரிகிருஷ்னன் நீ
கொஞ்சிப் பேச சண்டை போட ஒரு அக்காவும்,
சமாதானம் பண்ண அம்மாஅப்பாவும்
குடும்பமாய்,
நீ வாழ்ந்த வாழ்வியல்
எங்கள் நெஞ்சுக் கூட்டில்
நினைவுகாளாய் ஏராளம்...
உன் பிறந்தநாள் இன்று,
உனக்காய் பிறந்த
இந்த கவிதை,
அமுதத் தமிழ் உண்டு
அன்பினில் பகை வென்று
அகிலமும் வாழ்த்த உனை,
ஹரிகிருஷ்னனாய் ஒளி வீசி
ஆண்டுகள் கடந்தோட
அன்பனே நீ வாழியவே!
தேரோட்டும் கண்ணனாக
முடி சூடா
மன்னனாக
முகம் மலர்ந்த
தாமரை போல்
நீர் வாழ்க
நின் புகழ் வாழ்க!!
ஈன்றவர்கள் உன்னோடு பிறந்தவர்கள் உனை வாழ்த்த
சான்றோன் என
ஊர் வாழ்த்த
சாணக்கியனாய்
சத்திரியனாய்
சகலமும் பெற்று
நீ வாழ்க்கையில் வெற்றியடைய
வாழ்த்துகிறோம்
நீ நீடுழி வாழியவே!!!
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
( சித்தப்பா + சித்தி )
கவிஆக்கம்: நா.சு.கார்த்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக