நான் எழுதிய கவிதைக்கு
கருவாகி
இன்று தோழனாய்
உருமாறி
பதிமூன்று வயதை
தொட்ட எனது
மகனே...! தினேஷ்பாரதி..!
உன் பிறந்த நாளை
பார்த்து மற்ற நாட்கள்
பொறாமைப்படுகின்றன??!!!..
பிறந்து இருந்தால்
உன் பிறந்த நாளாகத் தான்
பிறந்து இருக்க வேண்டும் என்று ..
வாழ்த்தட்டும் காற்றும்
நாளை நீ காட்டும்
திசையும் வாழட்டும்...
வாழ்த்தட்டும்
நல்லோர் உள்ளம்
போற்றட்டும்
நண்பர்கள் உள்ளம்...
எட்டு திசையெங்கும்
ஈகை வளர
உன் கரங்கள் துடிக்கட்டும்
என்றும் இனிமையாய்
இனிதே வாழ்க நலமாய்
எனது இனிய பிறந்த நாள்
நல் வாழ்த்துக்கள்....
நீ நலம் வாழ தினம் வாழ்த்தும் இந்த
அப்பாவின் வாழ்த்து எப்போதும் உனக்குண்டு..
நா.சு.கார்த்தி
( அப்பா)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக