செவ்வாய், 29 மே, 2018

செவிலியின் வலிகள்(Nurses)





செவிலி என்றால் உங்கள் அதிகம் பேருக்கு என்ன பொருள் என்றே தெரியாமல் இருக்கும்
.
நர்ஸ் அம்மா வை தான் செவிலி என்று தமிழ் மொழியில்  அழைக்கிறோம்
.
நர்ஸ் என்றாலே அவர்களை கேவலமாக பார்க்கும் சமுதாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்
.
ஆனால் அவர்களை நினைத்து பார்ப்பது இல்லை
.
நீங்கள் ரோட்டில் அடிப்பட்டு கிடக்கும் போது 108 க்கு  போன் செய்வீர்கள் அந்த ஊர்தியில் தெய்வம் போல் வந்து உங்களுக்கு உதவுவது செவிலி தான்
.
ஆனால் நம் நாட்டு செவிலி க்கு சம்பளம் குறைவாக தான் இருக்கிறது
.
மருத்துவமனையில் நீங்கள் நோயுற்று நடக்க கூட முடியாமல் நோயால் அவதி பட்டு கொண்டு இருப்பீர்கள்
.
உங்களின மலம் ஜலம் கழிக்க கைதாங்கலாக கூட்டி கொண்டு போவாள் செவிலி
.
நீங்கள் ஜ சி யு இருக்கும் போது ஒரு குழந்தையை போன்று உங்களுக்கு உணவு அலித்து உங்களுக்கு முடி வெட்டி   நீங்கள் வலியால் கதறும் போது உங்கள் கைகளை பற்றி கொண்டு உங்களுக்கு சேவை செய்தாள் செவிலி
.
ஆனால் அவளின் சொந்த வாழ்க்கை கான ஒரு துணையை தேடும் போது அவளை இந்த சமுதாயம் ஒரு வித பார்வை பார்க்கும்
.
நான் உங்களை தான் சொல்கிறேன்
.
நமக்கெல்லாம் பகல் பகலாககவும் இரவு இருளாகவும் இருக்கும்
.
பல செவிலி களுக்கு பகல் இரவாகவும் இரவு பகலாகவும் இருக்கும்
.
தனக்கு சாப்பிட நேரம் இல்லாமல் நோயாளிக்கு சாப்பிட கொடுக்கும் செவிலிகளும் உண்டு
.
உன் உடல்களை ஒரு வயதிற்க்கு பிறகு உன் தாயையோ உன் காதலியை கூட தீண்ட விட மாட்டாய் ஆனால் உன்னை குணபடுத்த செவிலி தீண்ட வேண்டும்
.
நீ அவர்களிடம் சிரித்து பேசாவிட்டாலும் பரவா இல்லை கேவலமாக எண்ணாதே
.
இனிமேலாவது நீங்கள் மருத்துவமனைக்கு போகும் போது அவர்களை உங்கள் சகோதரியாகவும் உங்கள் பிள்ளைகள் போன்றும் நினையுங்கள் அவர்களை உற்சாகப்படுத்துங்கள்
.
மருத்துவரால் என்னேரமும் நெருக்கடி வந்து கொண்டு இருக்கும் போது நீங்களும் அவர்களை நெருக்கடி செய்யாதீர்கள்
.
பணம் சம்பாதிக்க ஆயிரம் தொழில் இருக்கலாம் ஆனால் சேவை செய்ய செவிலி ( nurse)  ஒரு சில நல்ல மனமே உள்ளன
.
நல்ல குணம்
.
நல்ல பொறுமை
.
சேவை மனப்பான்மை
.
என் மகளும் ஒரு
செவிலி (Nurse) என்பதில் நான் பெருமை அடைகிறேன்
அடுத்தவரின் வலியை புரிந்து கொள்ளும்
.
இப்படி பட்ட அன்னை தெராசாக்கள் எல்லா மருத்துவமனையிலும் பணி செய்கிறார்கள்
.
இனிமேலாவது அதை புரிந்து கொண்டு அவர்களை உற்சாக படுத்துங்கள்
ஆண் மற்றும் செவிலியர்களுக்கு சமர்ப்பணம்
                          நா.சு.கார்த்தி
                          சென்னை

மணப்பெண்னை மகத்துவமாக பார்க்கவேன்டும் மணமகன்கள்

திருமணம் செய்யப்போகும் ஆண்களே.... பெண்களே... இதை கட்டயமாக படியுங்கள்...!

ஒரு பெண் திருமணத்திற்காக அவள் மனம் படும்பாடு

நானு என் அக்காளுக்கு தம்பியாக தங்கைக்கு அண்ணனாக மகள்களுக்கு தகப்பனாக இப்படி என் குடும்பன் உறுப்பினர்களை திருமணம் செய்து கொடுத்ததாள்

பெண்களின் உனர்வு எனக்கு தெரிகிறது அதை இங்கே எழுதுகிறேன்.
எல்லா பெற்றோருக்கும் தங்கள் பெண்ணை ஒரு நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற கனவு நியாயமான ஒன்று தான்..!!

அவளுடைய பெற்றோரும் அப்படி தான் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர்..!! படித்த மாப்பிள்ளை. கை நிறைய சம்பாதிக்கும் ஒருவன். இருவருக்கும் இருவரையும் பிடித்தது..!!

உடனே நிச்சயம் செய்து விட்டனர்..!! இருவரும் தினமும் அலைபேசியில் பேசத் தொடங்கினர்..!!
திருமண நாள் நெருங்க நெருங்க அவள் வீட்டில் ஒரே பதட்டம்..!! வேலைகள் தலைக்கு மேல் கிடந்தது..!!
இருவரது வீட்டிலும் வேலைகள் துரிதமாக நடந்தது..!!

நாளை திருமண நாள்...
அவளுக்கு மனது என்னவோ போல் இருந்தது..!!

வீட்டை ஒரு முறை சுற்றி பார்க்க வேண்டும் போல் இருந்தது..!!
தினமும் அவருடன் பேசியதில் வீட்டை விட்டு செல்ல போகிறோம் என்று அவள் அப்போது நினைக்கவில்லை..!!
ஆனால் ஏதோ ஒன்றை இழக்கப்போகிறோம் என்று அவள் மனம் பரிதவித்தது..!! தந்தையையும், தாயையும் பார்த்தாள். எல்லோரும் வேலையாய் இருந்தனர்..!!
அவள் வீட்டை ஒரு முறை சுற்றி வந்தாள்..!!

விரித்த கண்களோடு வீட்டை பார்த்தாள். கண்கள் சுருங்கி பின்னர் ஓரத்தில் நீர் துளி சொட்டியது..!!

அங்கே.. தம்பி தனது புதுத்துணி பரவசத்தில் "அக்கா"... என ஓடி வந்தான்..!!
அவளை பார்த்ததும்.. " என்னாச்சுக்கா..?"
என்றான்..!!

திருமணம் வேளைபாட்டில் இருந்த  அண்ணனோ என்னடா பட்டு நீ மகாராணி போலிருப்பமா என்று சொல்ல.

அக்காளோ ஓடி வந்து செல்லம் என்ன பாருமா எனக்கு திருமணம் ஆகி 2 வருஷம் ஆகுது நான் நல்லாதான இருக்கேன் நீயும் நல்லாதான் இருப்பமானு சொல்ல

எப்பொருள் வாங்கினாலும் சரிசமமாக. பிரிக்கச் சொல்லி சண்டை போடும் நான் இனி யாருடன் சண்டை போடுவேன்..??

இந்த சின்ன சின்ன மகிழ்ச்சிகளை கொடுத்து விட்டு நான் செல்ல போகிறேனே" என விழியோரம் வடிந்த நீரை துடைத்துக் கொண்டே எண்ணினாள்..!!

"அடுப்படியில் பால் கொதிக்கிறது நீ எங்கே போன..??" என்று அவளை திட்டினாள் அவளை பெற்றவள். அவளை வளர்த்தவள்.. !! அம்மாவை அடிக்கடி திட்டுவதும்.. பின்னர் கட்டி அணைப்பதும் இனி கிடைக்குமா..??

அப்பா யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்..!!
அவள் பக்கத்தில் சென்று அமர்ந்தாள்..!!
அப்பா பேசிக்கொண்டே அவளை பார்த்து "அம்மாவை கொஞ்சம் கூப்பிடுமா..!!" என்றார்..!!

"நீ எது கேட்டாலும் வாங்கி தருகிறேன். நீ என் செல்லம்டா.." என்று அன்பை கொட்டும் அப்பாவின் அன்பை இனி நான் எங்கே தேடுவேன்..!!

எச்சிலையும், சோகத்தையும் தொண்டையில் விழுங்கி விட்டு அம்மாவை அழைத்து விட்டு வெளியில் உள்ள மாடிப்படியில் உட்கார்ந்தாள்..!!

எங்கிருந்தோ குரல்..
"அடியே உள்ள போ.. கறுத்து போக போற.. நாளைக்கு கல்யாணத்த வச்சிக்கிட்டு வெளியே வந்து உட்காராத.. !!" பாட்டியின் குரல் தான் அது..!!
எப்போதும் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கும் பாட்டியின் பேச்சை கேட்காமல் முறைப்பாள்..!!
ஆனால் இப்போது முறைக்க தோணவில்லை.

முகம் அப்படியே அழுவது போல பொங்கியது. " என்னாச்சுடி என் ராசாத்தி.." பாட்டி அருகில் வந்து கேட்டவுன் அதற்கு மேல் முடியவில்லை. வீட்டிற்குள் ஓடி சென்று கத்தி அழுதாள்.. !!
எல்லோரும் பயந்து கொண்டு ஓடி வந்தனர். அவள் அம்மாவிடம் "அப்பா நான் இங்கேயே இருந்து விடுகிறேன். உங்களை விட்டு நான் எப்படி செல்வேன். அங்கே எப்படி இருக்குமோ எனக்கு பயமாக இருக்கிறது..!!" என்று அழுதாள்..!!

உடனே அப்பாவின் மனம் அழுதது. அம்மா சமாதானம் செய்தாள்..!!

அப்பா அவ்வளவு நெருக்கம் இல்லாமல் இருந்தாலும் அப்பாவிற்கும் மகளுக்கும் உள்ள பாசம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது..!!

"அழாதே அக்கா மாமா உன்ன நல்லா பாத்துப்பாருக்கா.." என வெகுளி பேச்சில் சமாதானம் செய்தான்..தம்பி!

அன்று இரவு...
அவளுக்கு பிடித்த அத்தனையும் சமைத்து கொடுத்தாள் அம்மா..!! ஆனால் அவள் மனம் புண்பட்டு போய் இருந்தாள்..!

நாளை திருமணம். போகும் இடம் சொர்க்கமோ இல்லையோ என்றெல்லாம் தெரியாது. ஆனால் வாழ்ந்த ஒரு சொர்க்கத்தை விட்டு மட்டும் அவள் செல்ல போகிறாள் என்பது தெரிந்தது..!!

ஆணின் திருமணம் என்பது ஆண்கள் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு..!!

ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அது மாற்றம்..!!

அவள் வாழ்ந்த வீட்டில் இருந்து வேரோடு பிடுங்கி எடுத்து மற்றொரு இடத்தில் நட்டு வைப்பதுதான் பெண்ணின் திருமணம்..!!

நேசியுங்கள்_பெண்களை
மற்றும் அவர்களின் உணர்வுகளை!!.

பிடித்தால் ஷேர் செய்யுங்கள்

                              இங்ஙனம்
                           நா.சு.கார்த்தி
       நாரேரிக்குப்பம் திண்டிவனம்.604302
                    கைபேசி: 9884386544


ஞாயிறு, 27 மே, 2018

ஐபிஎல் கிரிகெட் தொடரில் சென்னை அனி வெற்றி

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில்
ஹைதராபாத் அணியை

8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை தட்டியது சென்னை சூப்பர் கிங்க்ஸ். ( CSK groups members )
AMBATI RAYUDU
CHAITANYA BISHNOI
DAVID WILLEY
DEEPAK CHAHAR
DHRUV SHOREY
DWAYNE BRAVO
FAF DU PLESSIS
HARBHAJAN SINGH
IMRAN TAHIR
KANISHK SETH
KARN SHARMA
KEDAR JADHAV
KM ASIF
KSHITIZ SHARMA
LUNGI NGIDI
MARK WOOD
MONU KUMAR
MS DHONI
MURALI VIJAY
NARAYAN JAGADEESAN
RAVINDRA JADEJA
SAM BILLINGS
SHANE WATSON
SHARDUL THAKUR
SURESH RAINA
POINTS TABLE
அனைவரையும் வாழ்த்துகிறோம்..
வாழ்த்துக்கள்- ஐபிஎல் சாம்பியன்ஸ் சிஎஸ்கே சிங்கங்களை இங்கே வாழ்த்துகிறோம்......

                    கா. தினேஷ்பாரதி   
                    கா.சக்திதாசன்
           ( தீவீர ஐபிஎல் CSK ரசிகர்கள் )




செவ்வாய், 22 மே, 2018

அன்னன்அன்னியார் மகனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்து கவிதை



உன் அம்மாவின் ஆண்பிள்ளைக்
கனவுக்கும்,
உன் அப்பாவின் தலைமுறைக்கு
வளம் தந்த,
செல்ல மகன் ஹரிகிருஷ்னன்  நீ
கொஞ்சிப் பேச சண்டை போட ஒரு அக்காவும்,
சமாதானம் பண்ண அம்மாஅப்பாவும்
குடும்பமாய்,
நீ வாழ்ந்த வாழ்வியல்
எங்கள் நெஞ்சுக் கூட்டில்
நினைவுகாளாய் ஏராளம்...
உன் பிறந்தநாள் இன்று,
உனக்காய் பிறந்த
இந்த கவிதை,
அமுதத் தமிழ் உண்டு
அன்பினில் பகை வென்று
அகிலமும் வாழ்த்த உனை,
ஹரிகிருஷ்னனாய் ஒளி வீசி
ஆண்டுகள் கடந்தோட
அன்பனே நீ வாழியவே!
தேரோட்டும் கண்ணனாக
முடி சூடா
மன்னனாக
முகம் மலர்ந்த
தாமரை போல்
நீர் வாழ்க
நின் புகழ் வாழ்க!!
ஈன்றவர்கள் உன்னோடு பிறந்தவர்கள் உனை வாழ்த்த
சான்றோன் என
ஊர் வாழ்த்த
சாணக்கியனாய்
சத்திரியனாய்
சகலமும் பெற்று
நீ வாழ்க்கையில் வெற்றியடைய
வாழ்த்துகிறோம்
நீ நீடுழி வாழியவே!!!
பிறந்தநாள் வாழ்த்துக்கள்

                        ( சித்தப்பா + சித்தி )
         
       



கவிஆக்கம்: நா.சு.கார்த்தி

திங்கள், 21 மே, 2018

சக்தியுகம் 🌙🌙🌙🙏🙏🙏

அகிலம் எல்லாம்
மகிழ்ந்து விளங்க
நாரேரிக்குப்பம்தனிலே  அமர்ந்து அருட்புரியும் ஸ்ரீ கெங்கையம்மா
நீ அடியவர்
துயர் தீர்க்கும் !
ஆயிரம் நலம் சேர்க்கும்
அற்புத விளக்காகும் !!!
அம்மா உன் உள்ளம் குளிர
கூழ்வார்துகிறோம் இன்றுனக்கு
எங்கள் உள்ளத்து குறைதனை தீர்ப்பாயம்மா .
    
                  சக்தி: நா.சு.கார்த்தி
                   நாரேரிக்குப்பம்
                   Cell: 9884386544

திண்டிவனம் வட்டம் இரட்டனை மதுரா நாரேரிக்குப்பம் ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயம்  கூழ்வார்த்தல் 22/05/2018 திருவிழாவிர்க்கு அனைவரும் வருக அம்மன் அருட் பெருக அனைவருக்கும் என் இனிய  வாழ்த்துக்கள் .

ஞாயிறு, 13 மே, 2018

செவிலியின் வலிகள்(Nurses) 🙏🙏🙏


செவிலி என்றால் உங்கள் அதிகம் பேருக்கு என்ன பொருள் என்றே தெரியாமல் இருக்கும்
.
நர்ஸ் அம்மா வை தான் செவிலி என்று தமிழ் மொழியில்  அழைக்கிறோம்
.
நர்ஸ் என்றாலே அவர்களை ஒருவித பார்வை பார்க்கும் சமுதாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்
.
ஆனால் அவர்களை நினைத்து பார்ப்பது இல்லை
.
நீங்கள் ரோட்டில் அடிப்பட்டு கிடக்கும் போது 108 க்கு  போன் செய்வீர்கள் அந்த ஊர்தியில் தெய்வம் போல் வந்து உங்களுக்கு உதவுவது செவிலி தான்
.
ஆனால் நம் நாட்டு செவிலி க்கு சம்பளம் குறைவாக தான் இருக்கிறது
.
மருத்துவமனையில் நீங்கள் நோயுற்று நடக்க கூட முடியாமல் நோயால் அவதி பட்டு கொண்டு இருப்பீர்கள்
.
உங்களின மலம் ஜலம் கழிக்க கைதாங்கலாக கூட்டி கொண்டு போவாள் செவிலி
.
நீங்கள் ஜ சி யு இருக்கும் போது ஒரு குழந்தையை போன்று உங்களுக்கு உணவு அலித்து உங்களுக்கு முடி வெட்டி   நீங்கள் வலியால் கதறும் போது உங்கள் கைகளை பற்றி கொண்டு உங்களுக்கு சேவை செய்தாள் செவிலி
.
ஆனால் அவளின் சொந்த வாழ்க்கை கான ஒரு துணையை தேடும் போது அவளை இந்த சமுதாயம் ஒரு வித பார்வை பார்க்கும்
.
நான் உங்களை தான் சொல்கிறேன்
.
நமக்கெல்லாம் பகல் பகலாககவும் இரவு இருளாகவும் இருக்கும்
.
பல செவிலி களுக்கு பகல் இரவாகவும் இரவு பகலாகவும் இருக்கும்
.
தனக்கு சாப்பிட நேரம் இல்லாமல் நோயாளிக்கு சாப்பிட கொடுக்கும் செவிலிகளும் உண்டு
.
உன் உடல்களை ஒரு வயதிற்க்கு பிறகு உன் தாயையோ உன் காதலியை கூட தீண்ட விட மாட்டாய் ஆனால் உன்னை குணபடுத்த செவிலி தீண்ட வேண்டும்
.
நீ அவர்களிடம் சிரித்து பேசாவிட்டாலும் பரவா இல்லை கேவலமாக எண்ணாதே
.
இனிமேலாவது நீங்கள் மருத்துவமனைக்கு போகும் போது அவர்களை உங்கள் சகோதரியாகவும் உங்கள் பிள்ளைகள் போன்றும் நினையுங்கள் அவர்களை உற்சாகப்படுத்துங்கள்
.
மருத்துவரால் என்னேரமும் நெருக்கடி வந்து கொண்டு இருக்கும் போது நீங்களும் அவர்களை நெருக்கடி செய்யாதீர்கள்
.
பணம் சம்பாதிக்க ஆயிரம் தொழில் இருக்கலாம் ஆனால் சேவை செய்ய செவிலி ( nurse)  நல்ல மனமே உள்ளன

நல்ல குணம்
.
நல்ல பொறுமை
.
சேவை மனப்பான்மை
.
என் மகளும் ஒரு
செவிலி (Nurse) என்பதில் நான் பெருமை அடைகிறேன்

அடுத்தவரின் வலியை புரிந்து கொள்ளும்
.
இப்படி பட்ட அன்னை தெராசாக்கள் எல்லா மருத்துவமனையிலும் பணி செய்கிறார்கள்
.
இனிமேலாவது அதை புரிந்து கொண்டு அவர்களை உற்சாக படுத்துங்கள்
ஆண் மற்றும் செவிலியர்களுக்கு சமர்ப்பணம்
                          நா.சு.கார்த்தி
                          சென்னை.95
                          Cell: 9884386544

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நான் எழுதிய கவிதைக்கு
கருவாகி
இன்று தோழனாய்
உருமாறி
பதிமூன்று வயதை
தொட்ட எனது
மகனே...! தினேஷ்பாரதி..!
உன் பிறந்த நாளை
பார்த்து மற்ற நாட்கள்
பொறாமைப்படுகின்றன??!!!..
பிறந்து இருந்தால்
உன் பிறந்த நாளாகத் தான்
பிறந்து இருக்க வேண்டும் என்று ..
வாழ்த்தட்டும் காற்றும்
நாளை நீ காட்டும்
திசையும் வாழட்டும்...
வாழ்த்தட்டும்
நல்லோர் உள்ளம்
போற்றட்டும்
நண்பர்கள் உள்ளம்...
எட்டு திசையெங்கும்
ஈகை வளர
உன் கரங்கள் துடிக்கட்டும்
என்றும் இனிமையாய்
இனிதே வாழ்க நலமாய்
எனது இனிய பிறந்த நாள்
நல் வாழ்த்துக்கள்....
நீ நலம் வாழ தினம் வாழ்த்தும் இந்த
அப்பாவின் வாழ்த்து எப்போதும் உனக்குண்டு..

                           நா.சு.கார்த்தி
                                 ( அப்பா)