நாங்கள் உழைப்பாளிகள்
நாங்கள் உழைப்பாளிகள் - ஆமாம்
நாங்கள் உழைப்பாளிகள்.
மாத சம்பளத்திற்கு
எங்களை விற்றுவிட்ட
உழைப்பாளிகள் நாங்கள்.....
வாரம் ஒரு முறை
ஜாமினில் எங்கள்
வீட்டுக்குசெல்லும்
கம்பெனி கைதிகள் - ஆமாம்
நாங்கள் உழைப்பாளிகள்.
உனவு வேலையில் மட்டும்
வெளி உலகைப் பார்க்கும்
பிறவிகள் - ஆமாம்
நாங்கள் உழைப்பாளிகள்.
உறங்கும் சுகத்தைக்கூட
தவனை முறையில்
அனுபவிக்கும் அதிஸ்டசாலிகள் - ஆமாம்
நாங்கள் உழைப்பாளிகள்.
மிசினுக்கு கூட ஒய்வு உன்டாம்
மின்சார தடையால் ஆனால்
எங்களுக்கோ அதுவுமில்லை
ஜெனரேட்டர் என்னும் சாத்தானால்
கேள்வி கேட்க முடியாத
வேலிக்குள் வெள்ளாட்டு
மந்தைகளாக வாழும்
உழைப்பாளிகள் நாங்கள் - ஆமாம்
நாங்கள் உழைப்பாளிகள் - ஆமாம்
நாங்கள் உழைப்பாளிகள்.
அனைவருக்கும் எங்கள் இனிய
மே தின வாழ்த்துக்கள்.......
நா.சு.கார்த்தி.............
சென்னை.95