ஒருமுறை உடைந்து விட்டால்
மீண்டும் ஒட்டவைக்க முடியாதது
கண்ணாடி மட்டுமல்ல
உறவும் தான்...!
உடையாமல் பார்த்து கொள்வோம்
உறவுகளை மட்டுமல்ல
அவர்களின் உள்ளங்களையும் தான்...!!!
ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016
உறவுகளை காப்போம்
என்னவனே
என்றோ
பதியம் செய்யப்பட்ட
நினைவுகளை
மெல்ல மெல்ல
மேலெழுப்பிய
திரைப்பாடல் ஒன்று !!
இரவு நேர
எதேச்சையாக
ஒலியாய் பரவ
உனக்கும் எனக்கும்
நமக்கும் பிடித்து
கேட்டு சலித்த
வரிகளில் ,
தொலைத்த நமது
பொக்கிசங்களை
என்னால்
தனியே மட்டுமே
தேட முடிகிறது
இப்போது
ஆண் என்பவன்
========
👤 ஆண் என்பவன்...
கடவுளின் உன்னதமான படைப்பு
சகோதரிகளுக்காக, இனிப்புகளை 🍬 தியாகம் செய்பவன்
பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளை 💭 தியாகம் செய்பவன்
காதலிக்கு 👰 பரிசளிக்க, தன் பர்ஸை காலி செய்பவன்
மனைவி குழந்தைகளுக்காக 👪, தன் இளமையை அடகுவைத்து அலட்டிக்கொள்ளாமல் அயராது உழைப்பவன்
எதிர்காலத்தை லோன் வாங்கி கட்டமைத்துவிட்டு, அதனை அடைக்க வாழ்க்கை முழுதும் லோ லோ என்று அலைபவன்
இந்த போராட்டங்களுக்கு இடையில், மனைவி-தாய்-முதலாளிகளின் திட்டுகளை வாங்கி, தாங்கிக்கொண்டே ஓடுபவன்
அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள் முழுக்க அர்ப்பணிப்பவன்
அவன் வெளியில் சுற்றினால், 'உதவாக்கரை' என்போம்
வீட்டிலேயே இருந்தால், 'சோம்பேறி' என்போம்
குழந்தைகளை கண்டித்தால், 'கோபக்காரன்' என்போம், கண்டிக்கவில்லை எனில், 'பொறுப்பற்றவன்' என்போம்
மனைவியை வேலைக்கு செல்ல, அனுமதிக்காவிடில் 'நம்பிக்கையற்றவன்' என்போம், அனுமதித்தால் 'பொண்டாட்டி சம்பாத்தியத்தில் பொழப்பை ஓட்டுபவன்' என்போம்
தாய் சொல்வதை கேட்டால், 'அம்மா பையன்' என்போம்; மனைவி சொல்வதை கேட்டால், 'பொண்டாட்டி தாசன்' என்போம்
ஆண்களின் உலகம், தியாகங்களாலும் வியர்வையாலும் சூழப்பட்டது.
இதனை பகிர்ந்து, ஆண்களுக்கு புன்னகையையும் பெண்களுக்கு புரிதலையும், ஏற்படுத்தலாம்
திங்கள், 15 பிப்ரவரி, 2016
விவசாயி மனசு
விவசாயி மனசு
விதைக்கும் பொழுது
கொஞ்சம்
நடும் பொழுது
கொஞ்சம்
இடையில்
கொஞ்சம்
வாங்கிய பணமெல்லாம்
வடடியும் முதலுமாய்
அறுவடைக்குப்பின்
அடைத்துவிட்டு
ஏதுமில்லாமல் நிற்கும் பொழுது
ஏரெடுக்க நினைக்கும்
விவசாயி மனசு.
ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016
வாக்காளபெருமக்களே சிந்தியுங்கள்
ஓட்டு கேட்டு ஓடிவந்தவர்
ஜெயித்தப்பின் தேடிபோனாலும்
கிடைப்பதில்லை...
ஐந்தான்டு கழித்து
கூழகும்பிட்டு போட்டு வரார்
நல்லாட்சிதர என் கட்சி சின்னத்தில்
போடுங்கள் ஓட்டு என்று...
மழை வெள்ளத்தில் குடிசைகள் முழுகியபொழுது
சட்டமன்றத்தில் சத்தம் செய்யாதவர்....
குடிநீர்கு கடும் வரட்சி வந்தபொழுது
குடிநீர் பெற்று தராதவர்
இப்பொழுது வரார்....
அவரது சின்னத்தை கையில் எடுத்து
அவர் கண்ணத்தில் நாலு போடலாமா ? அல்லது
நம் தலையிலே போட்டுக்கொல்லலாமா?
வாக்காளபெறுமக்களே வாழ்திறந்து செப்புங்கள்.
கவிஞர் நா.சு.கார்த்தி
அம்மன் ஆலயம்
அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில்
மூலவர் : அங்காளபரமேஸ்வரி உற்சவர் : - அம்மன்/தாயார் : - தல விருட்சம் : வில்வம் தீர்த்தம் : - ஆகமம்/பூஜை : - பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் புராண
பெயர் : - ஊர் : மேல்மலையனூர் மாவட்டம் : விழுப்புரம் மாநிலம் : தமிழ்நாடு பாடியவர்கள்: -
திருவிழா: ஆடி வெள்ளிக்கிழமைகளும், நவராத்திரியும், கார்த்திகை தீபமும், தைப் பொங்கலும், மாசி மாத தேர்த்திருவிழாவும் இங்கு முக்கிய திருவிழாக்களாகும்.
தல சிறப்பு: இத்தலத்து அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
திறக்கும் நேரம்: காலை 7 மணிமுதல் மதியம் 12 மணி வரையிலும், பிற்பகல் 2 மணிமுதல் இரவு 8 மணிவரையிலும் திறந்திருக்கும் இந்த சன்னதி அமாவாசையன்று இரவு முழுவதும் திறந்திருக்கும்.
முகவரி: அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில், மேல்மலையனூர் - 604 204, விழுப்புரம் மாவட்டம். போன்: +91 - 4145 - 234 291
பொது தகவல்: - பிரார்த்தனை கணவனை பிரிந்திருப்பவர்கள் மற்றும் கணவனின் தொந்தரவுக்கு ஆளாகி இருப்பவர்கள் இங்கு வந்து அங்காளபரமேஸ்வரியை வழிபட்டால் பிரச்னை தீரும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்: அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தலபெருமை: அங்காள பரமேஸ்வரி ஆதிபராசக்தியின் அம்சமாக இணைவதற்காக பார்வதி என்ற பெயரில் பர்வதராஜனின் மகளாக பிறந்தார். பின் பரமேஸ்வரனை திருமணம் செய்து கயிலையை அடைந்தாள். முன்பெல்லாம் சிவன், பிரம்மா இருவருக்குமே ஐந்து தலைதான் இருந்தது. திருமணத்தை நடத்திவைத்த பிரம்மா சிவனைப் பார்ப்பதற்காக கயிலை வந்தார். அப்போது ஏதோ குழப்பத்திலிருந்த பார்வதி ஐந்து தலையுடன் வந்தது சிவன் என கருதி, பிரம்மாவின் காலில் விழுந்து ஆசி வாங்கினார். நிமிர்ந்து பார்த்த போது தான் வந்தது பிரம்மா என்பதை உணர்ந்து வருந்தினார். இருவருக்குமே ஐந்து தலை இருப்பதால் தானே இந்த குழப்பம். எனவே பிரம்மனின் ஒரு தலையை எடுத்துவிடும்படி சிவனிடம் பார்வதி வேண்டினாள். பார்வதியின் வேண்டுகோளின்படி சிவனும் பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எறிந்தார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்திதோஷம் ஏற்பட்டது. சிவனின் பிரம்மஹத்தி தோஷம் போக்குவதற்காகவும், இந்த கலியுகத்தில் மக்களுக்கு அருள் பாலிப்பதற்காகவும் அன்னை பராசக்தி சிவசுயம்பு புற்று வடிவில் அங்காளபரமேஸ்வரியாக மேல்மலையனூரில் அவதாரம் செய்துள்ளார். இவர் வடக்கு நோக்கி அமர்ந்து நம்மை காத்து வருவது ஒர் சிறப்பம்சமாகும். வில்வமே இங்கு தல விருட்சமாகும். சரஸ்வதி சாபம் : தன் கணவனின் ஒரு தலை கிள்ளி எறியப்பட்டதை சரஸ்வதி அறிந்தார். உடனே கோபத்துடன் பார்வதியை பார்த்து சரஸ்வதி, ""எனது கணவர் பிரம்மனின் அகோர உருவத்திற்கு காரணமான நீயும் அகோரமாக போவாய்'' என்று சாபமிட்டார். இந்த சாபத்தின் பலனாகத்தான் மேல்மலையனூரில் அகோர உருவத்தில் அங்காளபரமேஸ்வரி என்ற நாமத்தடன் அமர்ந்தாள். சிலகாலம் கழித்து திருவண்ணாமலைக்கு சென்று அங்கு பிரம்மதீர்த்தத்தில் நீராடி சாபம் நீங்கி ஒரு மூதாட்டியின் வடிவம் பெற்று மீண்டும் மலையனூர் வந்து தங்கினார். அதன்பிறகு மலையனூரில் உள்ள மீனவர்கள் அங்காளம்மனுக்கு கோயில் கட்டினார்கள். தல வரலாறு: ஒரு முறை தட்சன் தன் மகளான தாட்சாயினியை சிவனுக்கு திருமணம் செய்து வைத்தார். உலகநாயகனான சிவனுக்கு மாமனாராகி விட்டதால் தட்சனுக்கு கர்வம் ஏற்பட்டது. சிவனை பார்க்க கைலாயத்திற்கு சென்ற தட்சனை நந்தி தடுத்தார். இதனால் கோபமடைந்த தட்சன், சிவபெருமானை அழைக்காமலேயே யாகம் ஒன்றை நடத்தினார். தன் தந்தைக்கு ஏற்பட்ட கர்வத்தை போக்க, தாட்சாயினி அகோர உருவம் கொண்டு யாகத்தையும், அதை நடத்திய தந்தையையும் அழித்தாள். அத்துடன் அந்த யாகத்திலேயே விழுந்து தன் உடலை அழித்துக் கொண்டாள். அப்படி உருவ மற்ற அவதாரமாக நின்ற அம்சமே அங்காளி சக்தி ஆகும். இதை அறிந்த சிவன் மிகுந்த கோபத்துடன் உருவமற்ற அங்காளியை தனது தோளில் சுமத்தி ஆங்காரமாக நடனம் ஆடினார். அப்போது அங்காளியின் கை துண்டாகி கீழே விழுந்தது. அப்படி விழுந்த இடம் தான் தண்டகாருண்யம் என்ற சக்தி பீடமானது. அந்த தண்டகாருண்யத்தின் ஒரு பகுதியே மேல்மலையனூர் ஆகும். தாட்சாயினி யாகத்தில் விழந்து சாம்பலான இடம் என்பதால் இக்கோயில் பிரசாதமாக சாம்பலைத்தான் தருகிறார்கள்.
சிறப்பம்சம்: அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்து அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
ஆலயம் செல்லுங்கள் அம்மன் அருள் பெருங்கள்
கவிஞர் நா.சு.கார்த்தி