ஆயிரம் சொந்தங்களிருந்தும்
எனக்கென வேண்டும் நீ எனக்கு ,
என் கண்ணீர் துளிகளை
துடைத்திட வேண்டும் நீ எனக்கு ,
உன் கோவ கதிர்கள் என் மீது பட்டு நான்
தொட்டாற்சிணிங்கியாய் சுருங்கும் போது
உன் கரங்களினால் தென்றலாய் என்னை
தழுவிட வேண்டும் நீ எனக்கு ,
கைகளிரெண்டிலும் வளையல்கள்
மாட்டிட வேண்டும் நீ எனக்கு
அது கைகளை அழகூட்ட
வேண்டுமென்பதற்கில்லை
ஊடலிலும் கூடலிலும் அவை
உன் நெஞ்சோடு மோதி இசைக்கின்ற
இசையை கேட்டிட வேண்டுமென்பதற்கே,
என் கண் இமைகளில்
மையிட வேண்டும் நீ எனக்கு
அது உனக்கு அழகாய் தொ¢ய
வேண்டுமென்பதற்கில்லை
மையிடும் வேளையிலே
உன் கண்களில் என்னழகை
பார்த்திட வேண்டுமென்பதற்கே,
மூப்பெய்து தோள் சுருங்கி முதுமை
அடைந்தாலும் வேண்டும் நீ எனக்கு
அது ஒருவருகொருவர் துணை நிற்க
வேண்டுமென்பதற்கில்லை
இருவரும் சேர்ந்து குழ்ந்தைகளாய் மாறி
நாம் தொலைத்திட்ட இளைமையை
தேடிட வேண்டுமென்பதற்கே,
மொத்ததில் நான் வாழ்ந்திடும்
நாட்கள் அனைத்திலும் எனக்கே
உரியவனாய் வேண்டும் நீ எனக்கு ,
கொக்கரக்கோ...கொக்கரக்கோ...
சேவல் சத்தம் கேட்டதும்... விழித்துவிட்டேன்
அத்தனையும்...
என் கனவுலகில்..முற்றம். !!!
நா.சு.கார்த்தி....👈