சனி, 15 பிப்ரவரி, 2020

{💐எங்கள் தங்கை மகன்😘}


எ‎ங்கள் வாழ்வின்
இனிய வசந்தம் எங்கள் தங்கை
தாயென எம் தங்கை பெற்ற பிள்ளைக்கு தாய் மாமனென ஆனேன்

இவன் கொஞ்சுகிறானா பேசுகிறானா 
எனப் பிரித்தறி யலாது? 
ஆனால் என் கண்ணங்களை கெஞ்சிடச் செய்திடுவான்,
நஞ்சு புகா இனிய மழழை மொழி கற்றுக் கொடுப்பான் 
என்னை மழழையாகவே ஆக்கி விளையாடிடுவான்,

தத்தி தத்தி நடந்திடுவான் 
கிள்ளை மொழி பேசிடுவான் 
வஞ்சமிலா புன்னகையில் என்னை கவர்ந்திடுவான்,
இவனைக் கண்டால் 
என் துன்பமெலாம் பறந்திடுமே
யார் இவன்?அவன் தான் என்  
தங்கையின் செல்ல மகம் இப்புவியை ஆளவந்த புவியரசன் அவன்🌹🥰🙋🏻‍♂️

__நா.சு.கா__

புதன், 12 பிப்ரவரி, 2020

மஞ்சல் நீராட்டு

  {🌹நற்றமிழில் வாழ்த்துகிறோம்
  நலமனைத்தும் பெற்றிடுவாய்🌹}

  தத்திதத்தி எட்டடி எடுத்துவைத்த 
  காலம்போய்,
  சிட்டாய் பறந்த சிறார் காலம்
  முடிந்து போய்,
  இளமங்கையென      
  உருவெடுக்கும்
  எங்கள் இனிய இலக்கியாவுக்கு,

  வரப்போகும் வருடங்களில்
  பொறுப்புக்கள் அதிகமம்மா
  காற்றோடு தூற்றிக்கொள்
  கருத்தாக நடந்துகொள்,

  எளியவர்க்கு நிலவாக
  கயவர்க்கு நெருப்பாக
  உனைஉயர்த்தி ஊர்உயர்த்து;
  உள்ளத்தில் பணிவமர்த்து,

  அன்னைதந்தை வரஇயலா
  அத்துணை இடங்களுக்கும்
  தன்னம்பிக்கை தைரியமும்
  தாய்தந்தை ஆகிடுமே,

  இறையருள் உனக்குண்டு
  எந்நாளும் துவளாதே
  ஏற்றஇறக்கம் கண்டு
  என்றும்நீ அஞ்சாதே,
  ஊர்மெச்ச நீவாழ
  உளமார எங்கள் வாழ்த்து!

  நட்பிற்கான நேரமிது
  நிதானமாய் தேர்வுகொள்!
  நிழலாய் தொடர்ந்திடும்
  உறவுகளவை தெரிந்துகொள்!

  பெற்றவயிறு குளிர்ந்திருக்க
  பெரும்புகழை எய்திடுவாய்
  நற்றமிழில் வாழ்த்துகிறோம்
  நலமனைத்தும் பெற்றிடுவாய்..🌹!

  என்றும் அன்புடன்😘😘😘
  பெரியப்பா & பெரியம்மா
  தினேஷ்பாரதி & சச்திதாசன்
  மதுரவாயல் சேன்னை

வியாழன், 31 ஜனவரி, 2019

பிறந்தநாள் வாழ்த்துக்கள்...🎂🎂🎂

                                                     01/02/2019



-----------------------சு.பாரதிக்கு-----------------------

( என் இனிய பிறந்தநாள் 

வாழ்த்துக்கள் )

-----------------------01/02/2019-------------------------------



எங்கள் தமிழ் எழுத்தின் நாயகன் 

முண்டாசுக் கவிஞன், 

எட்டையபுரத்து ஏந்தல்,

மகாகவி பாரதியின் பெயர் கொண்ட 

பாசமலரே...!

மகளே..! 

அம்மா பாரதி,,,



உன் பிறந்தநாளை வாழ்த்தி எழுதிட. 

உடனடி மை தேடினேன் 

வானவில் தானாக தானமாக 

முன்வந்து தன்னையே தந்தது,

வண்ண வண்ண மை ஊற்றி 

உன்னை வாழ்த்தி எழுதினேன்,



எழுதப்பட்ட தாளுக்கு 

சிறகுமுளைத்து ஏழு வண்ணத்தில் 

வண்ணத்துப்பூச்சிகளாக 

என் முன்பு அணிவகுத்து நின்று 

வானில் பறந்திட அனுமதி கேட்டது,

அனுமதி தந்துவிட்டேன்..! 



அம்மா பாரதி... 

சற்று விழிமூடி திறந்துபார். 



உன் பிறந்தநாளுக்கு வாழ்த்திட. 

படபடக்கும் வண்ணத்துப்பூச்சிகள் 

என் வாழ்த்தினை பாடுகிறது பார்..! 



~~மகளே! 

~~ பாரதி மா 

~~அன்பின் சிகரமாய் 

~~உழைத்து சாதித்து 

~~மனம் போல் வாழ்க்கை 

     அமைத்து மகிழ்ந்து 

~~வாழ்வில் சகலமும் 

~~வசப்பட வாழ்த்துகிறேன்! 

~~வாழ்க ! நீடுழி வாழ்க..! 

~~வையகம் போற்றிட வாழ்க...! 



     என் இனிய பிறந்தநாள் 

     வாழ்த்துக்கள்...!



                சித்தப்பா...

               நா.சு.கார்த்தி...✍

திங்கள், 31 டிசம்பர், 2018

புத்தாண்டு வாழ்த்து கவிதை...!


பூத்தது புது வருடம்

பூத்து குழுங்கட்டும் புது வசந்தம்


நடந்து முடிந்தது முடிந்தது - இனி

நடப்பவை நல்லபடியாக நடக்கட்டும்.


எதிர்காலத்தை திட்டமிடுவோம்

எண்ணங்களை வசப்படுத்துவோம்


கடந்த வருடம்- நம்

கஷ்டங்களை கொண்டு போகட்டும்


புது வருடம் – பல

புதுமைகள் காண உதவட்டும்

நினைவுகளாய் இருக்கும் கனவுகள்

நிஜமாய் மாறட்டும்


இன்னொரு ஜென்மம் உண்டென்றால்

இந்த சொந்தங்கள் தொடரட்டும்


நம் வீட்டு சொந்தங்கள்

நலம் வாழ நாளும் பிராத்திப்போம்...!

 

அனைவரது வாழ்வும் நலமும்...வளமும்...
பெற்று 2019 ம் ஆண்டு மகிழ்ச்சியாக அமையட்டும்....ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்..!..நா.சு.கார்த்தி

புத்தாண்டு வாழ்த்து கவிதை...!


நாம் கடந்து வந்த
வாழ்க்கை புத்தகத்தில்,

வருடங்கள் மாதங்கள்
வாரங்கள் நாட்கள்
நிமிடங்கள் நொடிகளென
அனைத்து பக்கங்களை
புரட்டிப் பார்த்தால்,
நமக்கொன்று ஒன்று மட்டும் புரியும்
புத்தாண்டு என்பது
வருங்கால தேதிகளை மாற்றிவிடும்
ஒரு நாள்தான் என்று ;


கடந்து வந்த பாதைகள்
கடக்கவிருக்கும் பாதைகள்
நாம் சந்திக்க போகும்
அனுபவங்கள் யாருக்கும் தெரியாது

திசை திரும்பிவிட்ட
படகுமேலேரி பயணிக்கும் நம்மை
இந்த புத்தாண்டு
நம் கனவு கரையில் போய் சேர்க்கட்டும்;


மாற்றங்கள் அனைத்தும் பொதுவாயினும்
நம்மில் புதுப்புது மாற்றஙள் தோன்றி
நம் வாழ்வில் இன்பமும் அமைதியும்
என்றும் நிலைத்துவிட
இறைவனிடம் பிரார்த்தித்து
என் புத்தாண்டு வாழ்த்தினை சமர்ப்பிக்கிறேன்


அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே...


நன்றி. -நட்புடன் நா.சு.கார்த்தி

திங்கள், 17 டிசம்பர், 2018

வைகுண்ட ஏகாதசி 18/12/2018


ஓம் நமோ நாராயணா

வைகுண்ட ஏகாதசி

18/12/2018


வைகுண்ட ஏகாதசி விஷ்ணு ஆலயங்கள் அனைத்திலும் சொர்க்க வாசல் திறப்பு விழா நடத்தப்படும். 


இறைவனை தொழும் ஜீவாத்மா, வைகுண்ட வாசலில் வழியாக பரமாத்மாவை சேருகிறது என்ற ஐதீகத்தின் அடிப்படையில், இந்த சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெறு கிறது. 


இந்த விழா அதிகாலை வேளையிலேயே நடை பெறும். 

இதில் நாம் கலந்து கொண்டு, இறைவனுக்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளை கண்டுகளித்து பயன் அடையலாம்


விஷ்ணுவை வேண்டி வழிபடும் விரதங்களில் முதன்மையானதாக இருப்பது ‘ஏகாதசி விரதம்’. இந்த விரதத்தை கடைப்பிடிப்பது ‘அஸ்வமேத யாகம்’ செய்த பலனைக் கொடுக்கும் என்கிறது புராணங்கள்.

காயத்ரிக்கு ஈடான மந்திரம் இல்லை; தாய்க்கு சமமான தெய்வம் இல்லை; கங்கைக்கு ஈடான தீர்த்தம் இல்லை; ஏகாதசிக்கு சமமான விரதம் இல்லை’ 


என்று இந்த விரதத்தை மகிமைப் பற்றி அக்னி புராணம் எடுத்துரைக் கிறது. 


மார்கழி வளர்பிறையில் வரும் ஏகாதசியான, ‘வைகுண்ட ஏகாதசி’ மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியை ‘மோட்ச ஏகாதசி’ என்றும் அழைப்பார்கள்.


நாமும் வைகுண்ட ஏகாதசி விரதம் மேற்கொண்டு 

உபவாசம் இருந்து விஷ்ணுவை நினைத்து தியானிப்போம் அவர் புகழ்பாடும் கீர்த்தனைகளை பாராயணம் செய்வோம் 


இன்றைய தினம் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து இறைவனை காலை சொர்க்க வாசல் சென்று


நம்மிடம் உள்ள கர்வம், சிற்றின்பம், செயலற்ற தன்மை, ஆகியவற்றை துறந்து மனத்தினால் இறைவனிடம் நம்மை ஒப்படைப்பு செய்வோம்.

ஆசி அருட் பெருவோம்...



படித்ததில் எடுத்து தொகுத்தது:  

நா.சு.கார்த்தி

வியாழன், 13 டிசம்பர், 2018

முதல் காதல் நானும் விழுந்தேன் காதலில் பள்ளிப்பருவத்தில்



ஒன்றும் அறியாத பள்ளி பருவ காதல் 

இனிமையானது சுகமானது.!



முதல் காதல் யாரும் மறக்க முடியாத காதல்



நானும் விழுந்தேன் காதலில்


என்னோடு படித்தவல் 

அது ஒரு கனாக்காலம்....1995



பள்ளி பருவத்தில்...


பருவ தாகத்தில்...


அவளின் நினைவு


துளிர் விட்டு மரமானது...எம் மனதில்



தொலைவில் இருந்தாலும்


வார்த்தை அம்பெடுத்து


கடிதத்தில் தொடுத்திடுவாள்...



அருகில் வந்தாலும்


ஆசைமொழி உதிர்த்திடுவாள்...



கவிதையாய்


அவள் தந்த கடிதங்கள்...


சந்தோச வான்நோக்கி


சல்லாபம் இல்லாமல்


சிலகாலம் சிறகடித்தோம்....



பின்பு



மாப்பிள்ளை எனும் வேடனிடம் அகப்பட்டு


இல்வாழ்க்கைக்கு சென்றுவிட்டாள்...



ஒற்றை சிறகோடு


எங்கு நான் பறவேன்...



காலத்தின் வினையறுத்து


கண்கலங்கி நின்றுவிட்டேன்...


அன்று


வாழ்த்த வார்த்தையின்றி


வழிமாறி வந்துவிட்டேன்...

அத்தனையும் என் பள்ளி பருவத்தில்...!



இன்று என் வாழ்க்கை தடம்மாறி 

சென்றுவிட்டது....



சிலகாலம் பழகினாலும்


என் சிந்தனையில் நிற்கிரது...


என் முதல் காதல்.....!

               ( நா.சு.கார்த்தி )