எனக்கு ஆரம்பதிலேருந்து பாரதியார் பாரதிதாசனார் பிடிக்கும்
எனக்குள்ள கவிதை ஆர்வத்தால் !
எனக்கு திருமணம் முடிந்து
மாதங்கள் இரண்டு ஆகி
என் மனையாள் கருவுற்றாள் !
ஆண் பெண் எது என்று தெரியாது
அப்பொயுதே எங்கள் குயந்தைக்கு
பெயர் வைத்தோம் பாரதி யென்று!
அவ்வளவு ஆசைகள் எவ்வளவு கற்பனைக்கோட்டைகள் எங்கள் முதல் குயந்தை என்பதால் !
மாதங்கள் கடந்து
பிரசவிக்கும் நேரம்
மருத்துவ வசதி இல்லாத காலம் !
வயதான பாட்டிதான் பிரசவம் பார்க்கும் மருத்துவச்சி
என் மனையாளுக்கும் மருத்துவம் பார்த்தால் !
குயந்தை இறந்து பிறந்தது அழகான பெண் குயந்தை எங்கள் கண்களீல் ரத்த கண்ணீர்த்துளிகள் !
சோகங்களோடு
வாழ்க்கை படகு
சென்று கொண்டுருந்தது !
காலங்கள் கடந்தது தினேஷ் பாரதி
சக்தி தாசன் என்று
இரு பிள்ளைகள் சந்தோஷம்!
காலப்போக்கில் என் அண்ணன் அண்ணியார் பெற்றுஎடுத்த மகள் பாரதி
எங்களுடன் இருக்கை ஆனார் !
அன்று
மறைந்த எங்கள் மூத்த பாச மகளை
இதோ மறுபெறவியாக பார்க்கின்றோம் என் மகள் பாரதி !
அம்மா பாரதி ! பாரதி! என்று அயைக்கும்பொயுது எங்கள் மனம் ஆனந்தம் அடைகிறது !
அன்று
பிரசவம் பார்க்க செவிலியர்
இல்லாமல் என் மகள் மடிந்தால்
இன்று மறுபிறவியாக
அணைவருக்கும் மருத்துவம் பார்க்கும் செவிலியராக எங்களோடு வாழ்ந்து வருகிறார் எங்கள் மகள் பாரதி!
மறுபிறவி நம்பா நாத்திகன் கூட நம்பும் வன்னம் இங்கே நடந்திருக்கிறது இது உன்மை !
எங்களை விட்டு எங்கும் சென்றுவிடாதே மகளே பாரதி
கணவன் அவன் கைத்தளம் பற்றிய கணவன் வீடு செல்வதைத் தவிற !
நீதான் அம்மா எங்கள் மூத்த மகள்
நீ இன்றி எங்களுக்கு நிம்மதி ஏது மகளே பாரதி...!
நீ வந்த நாள் முதலாய் சந்தோசம்....
..............அப்பா 🙏